தமிழ் சினிமாவில் வில்லனாக நுழைந்து அதன் பிறகு தனது தனித்துவமான ஸ்டைல், நடை, டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களை கவர்ந்து 71 வயதிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் எவ்வளவோ வித்தியாச வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறார்.
ஆகையால் நாட்டாமை படத்தின் கதையை முதலில் என்னிடம் கொண்டு வந்திருக்கலாமே என ரஜினி இயக்குனரிடம் ஆதங்கப்படுகிறார். அந்த அளவிற்கு அந்த படத்தின் மீது ஒரு ஈர்ப்பு. இதனால் ரஜினியின் நெருங்கிய நண்பரான மோகன் பாபு தெலுங்கில் நாட்டாமை படத்தை ரீமேக் செய்தார்.
அதில் நாட்டாமை படத்தில் விஜயகுமாரியின் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். தமிழில் விஜயகுமார் நடித்ததை விட தெலுங்கில் ரஜினி சுருட்டை பத்த வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக நடந்து வந்து, அந்தக் காட்சியில் ஃபயர் ஆக நடித்திருப்பார்.
அதேபோன்று ஹிந்தியிலும் அதே கதாபாத்திரத்தில் ரஜினிதான் நடித்து மாஸ் காட்டியிருப்பார். இவ்வாறு ரஜினிக்கு நாட்டாமை படத்தின் கதை பிடித்துப் போனதால் தமிழில் கிடைக்காத வாய்ப்பை தெலுங்கு, ஹிந்தி ரீமேக் மூலம் நடித்து ஹிட் கொடுத்தார்.
இப்படி ரஜினியை கவர்ந்த தமிழ் படமான நாட்டாமை படத்தில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் முதலில் பாரதிராஜா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அவர் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லையாம். நாட்டாமை படத்தில் அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் சரத்குமார் நடித்திருப்பார்.
அதில் அண்ணன் கதாபாத்திரத்தில் தான் விஜயகுமார் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் பாரதிராஜாவின் கதாபாத்திரத்தை விஜயகுமாருக்கு கொடுத்துவிட்டு அண்ணன்-தம்பி இரண்டு வேடங்களிலும் சரத்குமாரை நடிக்க வைத்துள்ளனர்.
![rajini-nattamai-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/08/rajini-nattamai-cinemapettai.jpg)