பிரபலங்கள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அந்த காலகட்டத்தில் இருந்து இப்போது வரை மீடியாக்களுக்கு தீனி போடும் ஒரு பிரபலமாக தான் இருக்கிறார். அந்த வகையில் ஒரு பிரச்சனையின் காரணமாக இரவோடு இரவாக ரஜினியிடம் தீவிர விசாரணை நடந்திருக்கிறது.
இந்த விஷயம் அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் அந்த விசாரணையை செய்தது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான். அதாவது ரஜினிக்கும், நடிகை லதாவுக்கும் காதல் என்ற ஒரு புரளி அப்போது எல்லா மீடியாக்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக ஹீரோ, ஹீரோயின் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்தாலே இது போன்ற வதந்திகள் கிளம்பும். அப்படித்தான் ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் இணைந்து நடித்த போது ரஜினிக்கும், லதாவுக்கும் திருமணம் நடக்க போகிறது என்ற ஒரு செய்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதுவும் அவர்கள் இருவரும் மருதமலையில் ரகசிய திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் எம்ஜிஆரின் காதுக்கு சென்றிருக்கிறது. ஏனென்றால் அப்போது தான் பட குழு கோயம்புத்தூரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சென்றிருக்கிறார்கள். இதை கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து நான் சொல்லும் வரை நீங்கள் வேறு எந்த வேலையையும் பார்க்க கூடாது என உத்தரவு போட்டு இருக்கிறார்.
இதனால் பதறிப் போன அந்த தயாரிப்பாளரும் பதட்டத்தோடு அறையிலேயே இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து மீண்டும் எம்ஜிஆரிடம் இருந்து அவருக்கு போன் வந்திருக்கிறது. அதில் வழக்கம் போல் உங்கள் வேலையை கவனியுங்கள் என்று எம்ஜிஆர் கூறியிருக்கிறார். திடீரென்று என்ன நடந்தது என தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருந்த தயாரிப்பாளர் இது குறித்து விசாரித்து இருக்கிறார்.
Also read: துப்பாக்கியில் சுட்டதை நக்கலாக பதில் அளித்த எம்ஆர் ராதா.. 55 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை
அப்போதுதான் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் படப்பிடிப்புக்காக வந்த ரஜினி இரவோடு இரவாக எம்ஜிஆரை பார்க்க சென்ற விவரம் தெரியவந்திருக்கிறது. அதேபோன்று லதாவும் கோயம்புத்தூரில் இருந்து ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். மேலும் சென்னை வந்த ரஜினியிடம் எம்ஜிஆர் இது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறார்.
அதன் பிறகு ரகசிய திருமணம் என வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என தெரிந்து கொண்டு ரஜினியை மீண்டும் படப்பிடிப்புக்கு அனுப்பி இருக்கிறார். இதுதான் நடந்திருக்கிறது. ஆனால் இப்போது வரை இந்த விவகாரத்தில் எம்ஜிஆர் ரஜினியை கடத்தி சென்று அடித்தார் என்றெல்லாம் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் ரஜினி மீது எம்ஜிஆருக்கு ஒரு தனி பிரியம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also read: தலைவருக்கு வில்லியாக நடித்ததால் ஊரை காலி செய்த நடிகை.. ரஜினி ரசிகர்கள் அலறவிட்ட சம்பவம்