செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ஆணிவேரை பிடுங்கி டான் ஐ கழட்டி விட்ட ரஜினி.. மீண்டும் சொக்குப்பொடி போட்ட இயக்குனர்

Rajini  who dismissed The director of the film Don as unnecessary: கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து கிட்டத்தட்ட 100 கோடி வசூலை தாண்டி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் டான்.  

தந்தை, மகன் பாசப்பினைப்போடு கல்லூரி கலாட்டாவையும் இணைத்து வித்தியாசமான கதையை பகிர்ந்து அளித்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

வழக்கமான கல்லூரி கதை தான் என்றாலும் சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள்மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களின் காமெடியில், யாவரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றது.

அறிமுக படம்தான் என்றாலும் திறம்பட பணியாற்றி இருந்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

இதனை அடுத்து ஜெயிலருக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பு சிபிக்கு கிட்டியது.

திரைக்கதையை மாற்றி அமைத்து முட்டுக்கட்டை போட்ட ரஜினி

தலைவருக்கு கதை பிடித்திருந்த போதும் திரைக்கதையை பாகுபலி புகழ் ராஜமவுலியின் தந்தையிடம் கொடுத்து  வடிவமைக்க கோரி இருக்கிறார் ரஜினி.

ஒரு படத்தின் ஆணிவேரே அதன் கதை தான் ஆனால் தலைவர் செய்த இந்த காரியத்தால் மிகவும் மனமுடைந்து போனார் சிபி சக்கரவர்த்தி

இருந்த போதும் இதற்குப் பின் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் ரஜினிக்கு திரைக்கதை திருப்தி இல்லை என்பது போல் தோன்றியதால் ரஜினி மற்றும் சிபி சக்கரவர்த்தி கூட்டணி என்பது இல்லாமல் போனது.

மனம் நொந்து வெந்து போன சிபி சக்கரவர்த்தி மீண்டும் சிவகார்த்திகேயனி டமே தஞ்சம் அடைந்து உள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் திரைப்படத்திலும் மற்றும் முருகதாஸ் இயக்கும் SK 23 படத்திலும் பிசியாக உள்ளார்.  

சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணி உறுதியாகி உள்ளதை அடுத்து 2025 இல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது.

Trending News