Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதிக்காக விட்டுக் கொடுத்த தலைவர்.. ரஜினியின் உயர்ந்த மனசு!

தளபதிக்காக விட்டுக் கொடுத்த தலைவர்.. ரஜினியின் உயர்ந்த மனசு!

Rajini : ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்துள்ளார். லோகேஷ், ரஜினி காம்போ என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். […]

Rajini : ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்துள்ளார். லோகேஷ், ரஜினி காம்போ என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில் ஜூன் 21ஆம் தேதி குழி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக தகவல் வந்தது. அதாவது இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் டி ராஜேந்தர் ஒரு பாடல் பாடியிருக்கிறார். மேலும் பாடல் வரிகளை அறிவு எழுதி இருக்கிறார்.

மேலும் சாண்டி மாஸ்டர் நடன பயிற்சி கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இந்த படத்தில் இருந்த நிலையில் ரஜினி ஜூன் 23ஆம் தேதி பாடலை வெளியிடலாம் என்று படக்குழுவிடம் கேட்டுக் கொண்டாராம். இதற்கான காரணம் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள்.

விஜய்க்காக விட்டுக் கொடுத்த ரஜினி

அதற்கு முந்தைய நாள் கூலி படத்தின் அப்டேட் வெளியானால் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் பாதிக்கப்படும். கண்டிப்பாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போட்டி போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும், விஜய்யின் பிறந்தநாளில் எந்த இடையூறும் வந்துவிடக்கூடாது என ரஜினி கூலி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டை தள்ளி போட செய்திருக்கிறார். இது இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அதாவது சினிமாவில் போட்டி நடிகராக இருந்தாலும் திரையுலகில் நட்பு பாராட்ட வேண்டும். படங்களில் தான் போட்டி இருக்க வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் போட்டியிட கூடாது என்பதற்கு உதாரணமாக தலைவர் இவ்வாறு செய்திருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.