இளையராஜாவை வெறுத்த ரஜினி.. 28 வருடங்களாக ஒதுக்கி வைத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா இருவரும் தற்போது வரை நட்பு பாராட்டி வருகிறார்கள். பல பொது நிகழ்ச்சிகளில் இவர்கள் சகஜமாக பேசிக்கொள்வது பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி அடிக்கடி இளையராஜா போயஸ் கார்டன் சென்று ரஜினியின் நேரிலும் சந்தித்து வருகிறார்.

ஆனால் வெளியில் தான் இப்படி உள்ளனர். இவர்களுக்குள் நிறைய உட்கட்சி பூசல் இருப்பதாக தெரிகிறது. இதை இவர்கள் இருவருமே காண்பித்துக் கொள்ளாமல் நட்புடன் இருப்பது போல் மற்றவர்களை ஏமாற்றி வருகிறார்கள். ஒரு பேட்டியில் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனே இதை உளறி உள்ளார்.

Also Read : ரஜினியை விட குறைந்த வயதில் அம்மாவாக நடித்த 5 நடிகைகள்.. அண்ணாத்த அப்பத்தாவாக கலக்கிய குலப்புள்ளி லீலா

ஆரம்பத்தில் ரஜினியின் பெரும்பாலான படங்களில் இளையராஜா தான் இசையமைத்து வந்தார். ஆனால் 28 வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை. கடைசியாக ரஜினியின் வீரா படத்திற்கு தான் இளையராஜா இசை அமைத்திருந்தார்.

அந்த படத்திற்குப் பிறகு இன்று வரை இளையராஜா, சூப்பர் ஸ்டார் கூட்டணி அமையவில்லை. இதற்கு காரணம் இளையராஜா தான். அதாவது வீரா படத்திற்கு முன்னதாக பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான படம் உழைப்பாளி. இந்த படத்தில் இளையராஜா தான் இசையமைத்து வந்தார்.

Also Read : வாழவைத்த வரை பற்றி பேச பணம் வாங்கிய பாரதிராஜா.. எனக்கும் வேண்டுமென அடம் பிடித்த இளையராஜா

அப்போது உழைப்பாளி படத்தில் பாதி இசையமைத்துவிட்டு சொல்லிக் கொள்ளாமல் வெளிநாடு சென்றுவிட்டார். இது ரஜினிக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்பு தான் உழைப்பாளி படத்தின் மீதி இசையை இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா முடித்துக் கொடுத்தார்.

இதன் காரணமாக தான் இளையராஜா மீது ரஜினிக்கு கோபம் உண்டாகியுள்ளது. அதிலிருந்த தனது படங்களில் இருந்து இளையராஜாவை சூப்பர் ஸ்டார் ஒதுக்கி வைத்துள்ளார். ஏ ஆர் ரகுமான், அனிருத் போன்ற அப்போது பெரிய அளவில் பேசப்படும் இசையமைப்பாளர்களை தனது படத்தில் சேர்த்துக் கொண்டார்.

Also Read : இளையராஜாவை மட்டுமே நம்பி 19 படத்தை இயக்கிய பிரபலம்.. பிசிறு தட்டாமல் இசைஞானி செய்த காரியம்