செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மீண்டும் பேய் படத்தில் நடிக்கப் போகும் ரஜினி.. சுவாரஸ்யமான தகவலை போட்டு உடைத்த பிரபலம்

ஒரு காலகட்டத்தில் ஆக்சன் படங்களில் தூள் கிளப்பி வந்த ரஜினி, பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சந்திரமுகி படம் பல நாட்கள் ஓடி வசூலை வாரிக் குவித்தது. அதுமட்டுமின்றி ரஜினியின் திரை வாழ்க்கையில் அதிக நாள் ஓடிய படமும் இதுதான்.

ஆனால் இந்த படத்தில் ரஜினி சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மொத்த பெயரையும் வாங்கிச் சென்றார். இந்நிலையில் மீண்டும் இது போன்ற கதையில் ரஜினி நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர். மேலும் பி வாசு தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

Also Read : ஆஸ்க்காருக்காக ரஜினிக்கு வலைவீசிய அக்கடு தேசத்து இயக்குனர்.. சூப்பர்ஸ்டாரின் புது அவதாரம்

இந்தப் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததால் அவரது அனுமதியுடன் லாரன்ஸ் நடித்து வருகிறார். ரஜினி மீண்டும் பேய் படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். அதாவது லாரன்ஸ் முனி, காஞ்சனா போன்ற படங்களை இயக்கி, நடித்து இருந்தார். காஞ்சனாவின் அடுத்த பாகத்திற்கான கதையை லாரன்ஸ் தயார் செய்து வைத்துள்ளாராம்.

இதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் ஆலோசித்து வருகிறாராம். அதுமட்டும்இன்றி ரஜினிக்கு ஏற்றார் போல் ஒரு காமெடி கதையையும் லாரன்ஸ் வைத்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் ரஜினிக்கு எந்த கதை பிடிக்கிறதோ அதை வைத்து இயக்க ஆசைப்படுவதாக கூறினார்.

Also Read : மகள்களிடம் மாட்டி விழி பிதுங்கி நிற்கும் ரஜினி.. ஐஸ்வர்யா எடுத்துள்ள அதிரடியான முடிவு.!

இது பற்றி பலமுறை ரஜினியிடம் பேச்சு வார்த்தை நடத்திவிட்டதாகவும் அவரது அனுமதிக்காக காத்திருப்பதாக லாரன்ஸ் கூறியிருந்தார். இதைக்கேட்ட ரஜினி ரசிகர்கள் இப்போது உச்சகட்ட முயற்சியில் உள்ளனர். ஏனென்றால் சந்திரமுகி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

மீண்டும் அதே போல் ஒரு ரஜினியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்போது சூப்பர் ஸ்டார் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இதற்கு அடுத்ததாக லாரன்ஸ் படத்தில் ரஜினி நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read : ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு வீடு கட்டிய தனுஷ்.. மொத்த மதிப்பை கேட்டு வாயை பிளக்கும் திரையுலகம்

Trending News