வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து கமுக்கமாக உதவி செய்த ரஜினி.. நன்றி மறவாமல் குலசாமியாக வழிபடும் 2 நடிகர்கள்

Rajini who secretly helped by giving lakhs of money: ஒரு கை கொடுப்பது இன்னொரு கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ ரஜினிக்கு கச்சிதமாக பொருந்தும் என்று இவர் செய்த நல்ல விஷயங்களை தெரிந்து கொண்ட ஒருவர் கூறியிருக்கிறார். அதாவது எத்தனையோ நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் பிறருக்கு உதவ வேண்டும் மனசு இருந்தால் மட்டும்தான் உதவிக்கரம் பண்ண முடியும்.

அந்த வகையில் ரஜினியை பாராட்டி புகழ்ந்து பேசி இருக்கிறார்கள் இரண்டு முக்கிய நடிகர்கள். நடிகர் லிவிங்ஸ்டன் பேசிய ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்திருக்கிறார். அப்பொழுது ரஜினி தான் லிவிங்ஸ்டனின் மனைவியின் மருத்துவ செலவுக்காக 15 லட்ச ரூபாய் கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றியதாக லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார்.

இவர் மட்டும் அன்னைக்கு உதவி செய்யவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கக்கூட முடியாது. அதனால் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே ரஜினியை எங்கள் குலத்தை காக்க வந்த குலசாமி ஆகத்தான் நினைக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இவரை போல பழம்பெரும் நடிகர் விகே ராமசாமி அவர்களும் கூறி இருக்கிறார். அதாவது எம்ஜிஆர், சிவாஜி காலங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் காமெடி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தவர் தான் விகே ராமசாமி.

Also read: தலைவரே நீங்க இப்படி செய்யலாமா.? அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினிக்கு வந்த பஞ்சாயத்து

அதன் பிறகு வாய்ப்புகள் கம்மியானதும் ரஜினியிடம் தான் உதவி கேட்டிருக்கிறார். அதுவும் தயாரிப்பாளராக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அப்பொழுது ரஜினி ஓகே என்று வாக்கு கொடுத்து இருக்கிறார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து ரஜினி பிஸியாக நடித்ததால் இதை கவனிக்க முடியவில்லை. இருந்தாலும் ரஜினி நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் விகே ராமசாமிக்கு வாய்ப்பு இருக்கிற மாதிரி பண்ணி இருக்கிறார். உடனே அவரும் சரி இதுவாவது நமக்கு கிடைக்குதே என்று அமைதியாக ரஜினி சொன்னபோதெல்லாம் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் கொஞ்ச காலங்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக அருணாச்சலம் படத்தின் மூலம் விகே ராமசாமியின் ஆசை நிறைவேறி இருக்கிறது. அதாவது அவருக்கே தெரியாது இதுல நம் தயாரிப்பாளர் என்று. ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளராக 8 பெயருடைய பெயர்கள் வந்திருக்கிறது. அதில் விகே ராமசாமியின் பெயரும் இருந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அருணாச்சலம் படத்தில் விகே ராமசாமிக்கு ஒரு கதாபாத்திரத்தையும் கொடுத்திருக்கிறார்.

பிறகு அவர் நடித்த கதாபாத்திரத்துக்கு சம்பளத்தையும் கொடுத்து தயாரிப்பாளராக கிடைத்த பங்கில் 25 லட்ச ரூபாயும் கொடுத்து அவருடைய வறுமையை போக்கியிருக்கிறார். இதை என்றைக்கும் மறக்க கூடாது என்பதற்காக ரஜினியின் புகைப்படத்தை பூஜா அறையில் வைத்து குலசாமியாக வழிபட்டு வந்திருக்கிறார். இப்படிப்பட்ட இந்த இரண்டு நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட நடிகர்களை உணர்வுபூர்வமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

Also read: அடுத்த பயோபிக் படத்திற்கு ரெடியான ரஜினி மகள்.. தோனி பட வெற்றியால் ஐஸ்வர்யாவின் பேராசை

Trending News