ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ரஜினி டாப்புக்கு போனா கீழ தள்ளி விடும் 2 பேர்.. மெல்லவும் முடியாம முழங்கவும் முடியாம பரிதவிக்கும் சூப்பர் ஸ்டார்

Rajinikanth : ஜான் ஏறினால் முலம் சறுக்கும்னு சொல்லுவாங்க. அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கைக்கு தான் சரியாக பொருந்தி இருக்கிறது. 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகனாக ரஜினி இருக்கிறார்.

எந்த அளவுக்கு புகழ் மாலை அவர் தோள் மீது விழுகிறது, அதே அளவுக்கு கருப்பு சாயங்களும் அவர் மீது பூசப்படுகிறது. ரஜினி எப்போ எந்த விஷயத்தில் மாட்டுவார், சர்ச்சையாக பேசுவார் என ஒரு கூட்டமே காத்துக்கொண்டே இருக்கிறது.

ஒருத்தரின் வளர்ச்சி சுற்றி இருப்பவர்களுக்கு பிடிக்காமல் சதி தீட்டுகிறார்கள் என்றால் ஒத்துக் கொள்ள முடியும். ஆனால் சொந்த வீட்டில் இருப்பவர்களே அவருடைய இறங்கு முகத்துக்கு காரணமாக இருந்தால் என்னதான் செய்ய முடியும்.

பாபா படத்தின் பெரிய தோல்விக்கு பிறகு சந்திரமுகி மூலம் மீண்டும் சினிமாவில் தன்னுடைய வெற்றியை நிலை நாட்டினார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படம் அவரை 100 கோடி வசூல் நாயகனாக மாற்றியது.

ரஜினி டாப்புக்கு போனா கீழ தள்ளி விடும் 2 பேர்

ஆனால் அந்தப் புகழ் உடனே மறந்து போகும் அளவுக்கு அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா வேட்டு வைத்தார். கோச்சடையான் என்னும் படத்தில் அவரை நடிக்க வைத்து அதை மொத்தமாக படுதோல்வி அடைய வைத்தார்.

படத்தின் கதை வேற லெவலில் இருந்தும் அனிமேஷன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிது என்பதால் படம் தோல்வி அடைந்தது. அதிலிருந்து மீண்டு வர ரஜினிக்கு நீண்ட காலமானது. அதன் பின்னர் ஓர் அளவுக்கு டீசன்ட் ஹிட் படங்களை தான் கொடுத்து வந்தார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் ரஜினியே மீண்டும் உற்சாக கொம்பில் ஏற்றியது. டாப் ஹீரோக்கள் அத்தனை பேரும் ரஜினியின் வசூல் வேட்டையை பார்த்து மிரண்டு போனார்கள். அந்த வெற்றிக்கும் திருஷ்டி கழித்து விட்டார் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா.

லால் சலாம் என்னும் படத்தை இயக்கி ரஜினியை மீண்டும் தோல்வி ஹீரோவாக உருவகப்படுத்தி விட்டார். சின்ன சின்ன படங்கள் கூட OTT தளத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ரஜினி நடித்த லால் சலாம் படத்தை இன்னும் வெளியிட்ட பாடு இல்லை.

இதற்குக் காரணம் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் தொலைந்து விட்டதால் தான் படம் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது என ஐஸ்வர்யா கொடுத்த பேட்டி தான். தொலைந்த வீடியோ காட்சிகளை பேக்கப் எடுத்துக் கொடுங்கள் அப்போதுதான் படத்த ரிலீஸ் செய்வோம் என திட்டவட்டமாக அந்த நிறுவனம் சொல்லிவிட்டது.

இதை தான் சொந்த செலவிலேயே சூனியம் வைத்துக் கொள்வது என சொல்வார்கள் போல. என்னதான் பெற்ற மகள்கள் மேல் பித்து போல் பாசம் இருந்தாலும் தொழில் விஷயத்தில் ரஜினி உஷாராக இருப்பது ரொம்பவே அவசியம்.

ரஜினிகாந்த் பெண்கள் செய்யும் அட்டூழியம்

Trending News