ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கவர்ச்சி நடிகையுடன் தொடர்பில் இருந்த ரஜினி.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்

Actor Rajini: புகழின் உச்சியில் இருந்தாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அது சூப்பர் ஸ்டார் விஷயத்தில் பக்காவாக பொருந்தி போகிறது. சமீப காலமாகவே இவரின் சினிமா வாழ்வு, குடும்ப வாழ்வு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அதில் தற்போது வெளிவந்துள்ள ஒரு விஷயம் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது ஒரு காலத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கட்டுக்குள் வைத்திருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக யூடியூப் பிரபலம் வித்தகன் கூறி இருப்பது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Also read: மடுவை பார்த்து பயந்த அண்ணாமலை.. பக்குவத்தை இழந்து சிறுபிள்ளைத்தனமாக பதிலடி கொடுத்த ரஜினி

கவர்ச்சி நடனத்திற்கு புகழ்பெற்ற சில்க் சூப்பர் ஸ்டாரின் ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார். அதன் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போதைய பத்திரிகைகளில் கிசுகிசுவாக கூட வெளிவந்தது. ஆனால் அது உண்மைதான் என்று சொல்லும் வகையில் வெளிவந்த ஒரு படம் தான் இதற்கு ஆதாரமாக இருக்கிறது.

அதாவது சில்க்கின் பயோபிக் படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்தது. அதில் சில்காக நடித்திருந்த வித்யா பாலன் டாப் ஹீரோ ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருப்பது போல் காண்பிக்கப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரத்தின் பெயர் சூரியகாந்த்.

Also read: ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. விஜய், ரஜினியை வைத்து குளிர் காயும் அனிருத்

அது மட்டுமல்லாமல் அந்த கேரக்டர் சித்தரிக்கப்பட்டு இருந்த விதமும் ரஜினியை குறிப்பிடுவது போல் அமைக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் கூட இந்த விஷயம் தெரிந்திருக்கிறது என நிரூபணம் ஆகி இருக்கிறது.

அந்த வகையில் ரஜினிக்கும் சில்க்குக்கும் உறவு இருந்தது உண்மைதான் என்று வித்தகன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தான் இப்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது. சில்க் வாழ்க்கையில் பல ஆண்கள் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த லிஸ்ட்டில் சூப்பர் ஸ்டாரும் இருக்கிறாரா என்பது சற்றே நம்ப கடினமாக இருக்கிறது.

Also read: நெல்சன் மிரட்டும் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்.. ரஜினியை தூக்கி விடும் பான் இந்தியா ஹீரோக்கள்

Trending News