திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாபா படத்தை விட 10 மடங்கு பிரச்சனையை சந்திப்பார் ரஜினி.. தலைவர் 170 க்கு ஜாதி ரீதியாக பகிரங்கமாக வரும் மிரட்டல்

Rajini In Thalaivar 170 problem: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அவருடைய அடுத்த படமான 170வது படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலு இயக்கத்தில் நடிப்பதற்கு இணைந்திருக்கிறார். அந்த வகையில் இப்படத்திற்கான பட பூஜை இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் படுஜோராக நடைபெற்றது. அந்த வகையில் தொடர்ந்து இப்படத்திற்கான அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தற்போது இதற்கு பிரச்சனை பூகம்பமாக வெடித்துக் கொண்டு வருகிறது. அதாவது ரஜினி, ஞானவேல் இயக்கத்தில் நடிக்க கூடாது என்று ஒரு பக்கம் சர்ச்சை வெடித்து வருகிறது. அதற்கு காரணம் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படம் வன்னியர் சமூகத்தை இழிவாகவும், ஜாதி வெறி பிடித்தவர்கள் போலவும் வன்னியர் சமூகத்தை கொச்சைப்படுத்தி எடுத்திருக்கிறார்.

Also read: ரஜினியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் விஜய்.. போதும்னு சூப்பர் ஸ்டார் சொல்ல இதுதான் காரணம்

அப்படிப்பட்ட இவருடன் ரஜினி எந்த விதத்திலும் படம் நடிக்க கூடாது, அதையும் மீறி அவர் நடித்தால் பாபா படத்தை விட பத்து மடங்கு பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று புதிதாக சர்ச்சை கிளம்பி வருகிறது. ஒருவேளை இது எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் ரஜினி ஞானவேல் இயக்கத்தில் நடித்தால் இந்த படத்தை வேறு விதமாக நாங்கள் புறக்கணிக்க வேண்டியதாக இருக்கும்.

இதனால் அவர் உடனடியாக இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் இல்லை என்றால் எங்களுடைய முழு எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று ஜாதி ரீதியாக பயங்கரமான மிரட்டல் தலைவர் 170 படத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அத்துடன் இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தை நிரந்தரமாக மூட வைத்து விடுவோம் என்று ஒரு பக்கம் எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள்.

Also read: படுஜோராக நடந்த தலைவர் 170 பட பூஜை.. ஆளே அடையாளம் தெரியாமல் ஹேண்ட்ஸம் லுக்கில் ரஜினி

ஏற்கனவே ரஜினி கேரியரில் மறக்க முடியாத தோல்வி படம் என்றால் அது பாபா படம் தான். வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் ரொம்பவே அடிபட்டது. ஆனாலும் அதை இரண்டாவது முறையாக வெளியிட்டார்கள். அப்பவும் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் பாபா படம் படு தோல்வியை தான் சந்தித்தது. அதேபோல் இந்தப் படத்திலும் ஞானவேலுடன் ரஜினி நடித்தால் அதைவிட தோல்வி பெரிய அளவில் இருக்கும் என்று மிரட்டி கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வன்னியர் பைகாட் ரஜினிகாந்த், வன்னியர் பைகாட் ஞானவேல், வன்னியர் பைகாட் லைக்கா என்று கேஷ் டேக் போட்டு வைரலாக்கி கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில் ரஜினி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

Also read: ரஜினியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பிக் B.. சூப்பர் ஸ்டார் ரீமேக் செய்த அமிதாப்பச்சனின் 11 படங்கள்

Trending News