சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரஜினிகாந்த் விரும்பிய சூப்பர் ஸ்டார் படம்.. ரசிகர்களை கவர்ந்த அந்த 3 ரீமேக் படங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினியைப் போல் கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவர் நடித்த சில படங்களை ரஜினிகாந்தை வைத்து தான் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளார். அப்பேர்ப்பட்ட மூன்று படங்கள் கன்னடத்தில் ராஜ்குமாருக்கு மெஹா ஹிட்டான படங்கள்.

இங்கேயும் அந்தப் படங்கள் ரஜினிகாந்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படங்கள் தற்போது வரை இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

புதுக்கவிதை: ராஜ்குமார் நடிப்பில் 1976-ல் வெளியான திரைப்படம் நா நின்னா மரேயலரே. இப்படம் ரீமேக் செய்யப்பட்டு 1982 இல் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் புதுக்கவிதை. இப்படத்தை எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார். இப்படத்தை கவிதாலயா புரோடக்சன் தயாரித்திருந்தது.

பொல்லாதவன்: ராஜ்குமார், ஆரத்தி, ஜெயமாலா ஆகியோர் நடிப்பில் 1976 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் பிரேமதா கனிகே. இப்படம் கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து தமிழில் பொல்லாதவன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், லட்சுமி, ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்திருந்தனர்.

மன்னன்: ராஜ்குமார், மாதவி, கீதா ஆகியோர் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான அனுராகா அரலித்துவின் ரீமேக் படம் தான் மன்னன். இப்படத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை பி வாசு இயக்கியிருந்தார். மன்னன் படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த மூன்று ரீமேக் படங்கள் இல்லை என்றால் ரஜினி வளர்ச்சியில் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கும். இந்த 3 படமும் அப்போதைய சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜ்குமாரின் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News