தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்கள் மற்றும் நேரடியாக சண்டை போட்டுக் கொண்டுதான் வருகின்றனர். ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டாலும் பல நடிகர்களும் தமிழ் சினிமாவில் நண்பர்களாக ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.
அந்த ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளவர்கள்தான் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் தொழில் துறையிலும், வாழ்க்கையிலும் சிறந்த நண்பர்களாகவே இருந்துள்ளனர்.
பலமுறை மேடைகளில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடிப்பை பார்த்து வியந்ததாகவும் அவரைப் போல் என்னாலும் நடிக்க முடியாது, கமல்ஹாசன் போல் நடிகர்கள் யாராலும் நடிக்க முடியாது எனவும் பலமுறை கூறியுள்ளார்.
ஆரம்பகாலத்தில் கமல்ஹாசன் படத்தில் நடித்த வந்த ரஜினிகாந்த் அதன்பிறகு இருவரும் பேசி வைத்து தனித்தனியாக படங்கள் நடித்த ஆரம்பித்தனர். அதனை அவர்கள் பல மேடைகளில் கூறியுள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது படங்களில் கமல்ஹாசனை வைத்து ஏதாவது ஒரு வசனம் மற்றும் அவரது நட்பை வெளிப்படுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைத்திருப்பார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் வடிவேலு மற்றும் மீனா நாடகத்திற்காக ஒத்திகை பார்த்து நடித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது கீழே இருந்து ரஜினிகாந்த் மேடையில் ஏறி வடிவேலுவை அடிக்க சொல்லுவார். அப்போது இவன் மனதில் பெரிய கமல்ஹாசன் நினைப்பு என சொல்லுவார்.
அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் வெள்ளை ஆவதற்காக மேக்கப் செய்து கொண்டு “ இதுதான் முல்தானிமட்டி இதை போட்டு குளிச்சுட்டு வந்தா சும்மா கமல்ஹாசன் ” மாதிரி இருப்பேன் என சொல்லுவார்.
என்னதான் இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் சண்டை போட்டுக் கொண்டாலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சினிமாவிலும் வாழ்க்கையிலும் சிறந்த நண்பர்களாக உள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாய் ரஜினிகாந்த் அவர்களது படங்களில் கமல்ஹாசனை வைத்து இவர்களது நட்பை வெளிப்படுத்தி இருப்பார்.