சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தலைவிரித்தாடும் சம்பள பிரச்சனை.. அந்த காலத்தில் ரஜினி, விஜயகாந்த் செய்த செயல்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தலைவிரித்து ஆடுவது ஹீரோக்களின் சம்பள பிரச்சனை தான். அதாவது படத்தின் பட்ஜெட்டை விட ஹீரோக்களின் சம்பளம் அதிகமாகயுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அவஸ்தைப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது ஒரு படத்தை இயக்க சிறு தயாரிப்பாளர்கள் வெளியில் இருந்த வட்டிக்கு வாங்கிதான் படத்தை தயாரிக்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுப்பதால் அதற்கும் சேர்த்து தயாரிப்பாளர்கள் வட்டி கட்டி வருகிறார்கள். மேலும் படம் லாபம் பெற்றால் மட்டுமே அவர்களால் அடுத்த படத்தை எடுக்க முடிகிறது.

ஒருவேளை அந்த படம் தோல்வியை சந்தித்தால் அந்த தயாரிப்பாளரின் நிலை மிகவும் மோசமாகிறது. ஆனால் 80களில் ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டும்தான் சம்பளமாக கேட்பார்கள். அதுவும் ஹீரோக்கள் தானாக முன்வந்து சம்பளத்தை பேசமாட்டார்கள்.

தயாரிப்பாளர்கள் கொடுப்பதை மட்டுமே வாங்கிக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் நடித்த படம் சில சமயங்களில் தோல்வியை தழுவினால் அந்த தயாரிப்பாளருக்கு அடுத்த படத்தில் நடித்து கொடுத்து ஹீரோக்கள் உதவுவார்கள். அந்தப் படத்தின் லாபத்தை பொறுத்து கூடவோ, குறையவோ சம்பளமாக ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்கள் வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால் தற்போது உள்ள நடிகர்கள் படம் வெற்றியோ, தோல்வியோ தனக்கான சம்பளத்தை சரியாக வாங்கிக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தைக் கொடுத்தால் உடனே தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிடுகிறார்கள்.

ஆனால் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் தோல்வியை சந்தித்தது. இதனால் அந்தத் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. அதற்கு ஈடுசெய்யும் விதமாக அஜித் இதே கூட்டணியில் விசுவாசம் படத்தில் நடித்துக் கொடுத்தார். அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால் தற்போது உள்ள இளம் நடிகர்கள் இதுபோன்ற செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

Trending News