சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

திருந்தவே மாட்டியா ஐஸ்வர்யா.? உன் சந்தோசம் தான் முக்கியமா, செம டோஸ் விட்ட ரஜினி

தமிழ்சினிமாவில் வெகுநாளாக சர்ச்சைக்குள்ளான ஒரு விவாகரத்து பிரச்சனை என்றால் அது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷின் விவாகரத்து தான். இந்த விவாகரத்து சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து செல்வதாக அறிவித்தது உண்மையில் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதுமட்டுமின்றி தமிழில் முன்னணி நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்று உச்சத்தில் இருக்கக்கூடிய தனுஷ் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மத்தியில் இவர்களின் விவாகரத்து சுற்றிய செய்திகள் பற்றி தான் சமூக வலைதளங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும். அப்படி ஒவ்வொரு செய்திகள் வெளியாகும் போதும் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இருவரும் சமீபத்தில் சென்னையில் பல இரவு பார்ட்டிகளில் அடிக்கடி கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படி இரவு பார்ட்டிகளில் கலந்துகொண்ட தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து கூட பேசவில்லையாம். அவர்களின் நட்பு வட்டாரத்தில் மட்டும் பேசிவிட்டு அப்படியே யாரோ போல தெரிந்தும் தெரியாதது போல நகர்ந்து சென்று விட்டார்களாம். இதை பார்த்தவர்களுக்கு இவர்கள் சேர்வதற்கு இனி வாய்ப்பே இல்லை போல என்றுதான் தோன்ற வைத்தது.

குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்வார்கள் என்று நினைத்த போது, இவர்கள் நடந்து கொள்ளும் போக்கை பார்க்கும்போது கண்டிப்பாக இனி வாழ்வில் ஒன்றாக சேர மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இதற்கிடையில் எந்த தவறும் செய்யாமல் எப்போதும் தலை குனிவதை வழக்கமாகக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம். ஊர் உலகத்திற்கு தான் சூப்பர் ஸ்டார் ஆனால் சொந்த மகளுக்கு நல்ல அப்பாவாக அவரால் இருக்க முடியவில்லை.

ஏன் என்றால் அவரின் பேச்சு அங்கு எடுபடவில்லை என்று தான் கூறவேண்டும். ரஜினியும் ஐஸ்வர்யாவிடம் எவ்வளவோ அறிவுரை கூறினாலும் ஐஸ்வர்யா கேட்பதாக தெரியவில்லை. உன் குழந்தைகள் மிக முக்கியம் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், உன்னுடைய சந்தோசம் தான் உனக்கு முக்கியமா..? என்று சூப்பர் ஸ்டார் அவர்கள் ஐஸ்வர்யாவிடம் கடும் கோபத்தில் திட்டி விட்டாராம்.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து பார்ட்டிகளுக்கு செல்வது தனக்கு விருப்பமான இடத்தில் சென்று ஓய்வு எடுத்து வருவது என்ற ஐஸ்வர்யா தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறாராம். என்னதான் சொத்து சுகம் இருந்தாலும் நிம்மதி இல்லாமல் போனால் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரும் மனிதர் தானே என்று அவரது ரசிகர்கள் அவருக்காக வருத்தப்படுகின்றனர் . தொடர்ந்து அவர் படங்களில் வெற்றி கொடுத்தாலும் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் அவர் தோல்வி அடைந்து கொண்டேதான் இருக்கிறார்.

Trending News