திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Rajinikanth: பேரனின் பிறந்த நாளை தடபடலாக கொண்டாடிய ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படங்கள்

Rajinikanth celebrated his grandson’s birthday: ரஜினிக்கு ஆண் வாரிசு இல்லை என்றாலும் இரண்டு பெண் சிங்கங்கள் போல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, இயக்குனராகவும் பின்னணி பாடகராகவும் பயணித்து வருகிறார். இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு ஆண் மகன்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விடலாம் என முடிவெடுத்து இருக்கிறார்கள். இவரை தொடர்ந்து ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. ஆனால் இவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்கிற ஆண் குழந்தை உண்டு.

பேரனின் பிறந்த நாளுக்கு மாசாக என்ட்ரி கொடுத்த தலைவர்

rajini grand son birthday
rajini grand son birthday

பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இவர்களுக்கு வீர் ரஜினிகாந்த் என ஆண் குழந்தை இருக்கிறது. மேலும் சௌந்தர்யாவும் இயக்குனராக தயாரிப்பாளராக மற்றும் கிராபிக் டிசைனர் ஆகவும் சினிமாவில் பணியாற்றி வருகிறார்.

தற்போது சௌந்தர்யாவின் மூத்த மகன் மற்றும் ரஜினிகாந்தின் பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாளை நேற்று தடபுடலாக கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள டர்ப் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து கேக் கட் பண்ணி நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அழைப்பு கொடுத்து பங்க்ஷன் நிகழ்ச்சியை சிறப்பித்து கொடுத்திருக்கிறார் ரஜினி.

இவருடைய பேரன் கிரிக்கெட் டீமில் இருப்பதால் அவருக்கு பிடித்த மாதிரி ஒரு தீம்-மை வைத்து மிகப்பெரிய சர்ப்ரைஸை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். தற்போது இவர்கள் கொண்டாடிய பிறந்தநாள் பார்ட்டியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News