திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

தீபாவளிக்கு ரஜினி வைத்த குண்டு.. பரபரப்பை கிளப்பிய TVK-வின் அடுத்த மெகா பிளான் இதானா?

கடந்த பிப்ரவரியில் விஜய் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். இதையடுத்து தன் கட்சியின் கொடியும், கொடிப்பாடலையும் அறிமுகம் செய்தார் விஜய். அப்போது, விரைவில் மாநாடு நடக்கவுள்ளதாக அறிவித்த நிலையில் சொன்னபடி கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பிரமாண்டமாக தவெகவின் முதல் மாநாடு நடைபெற்றது.

50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர்தான் இம்மாநாட்டில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 8 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை இம்மா நாட்டில் பங்கேற்று தவெக மாநாட்டின் வெற்றியை உலகிற்கு அறியச் செய்தனர். இது சமீபத்தில் நடந்த மா நாடுகளில் கூடிய கூட்டத்தைக் காட்டிலும் அதிகம். குறிப்பாக யாருக்கும் பணமும், உணவும் கொடுக்காமல் விஜய்க்காகவே தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களூம் ஒருசேர திரண்டிருந்தனர்.

இது திராவிட கட்சிகள் மற்றும் மற்ற கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இத்தனை ஆண்டுகளாக கட்சி நடத்தி, ஓட்டு வங்கி அரசியலும் மாநாடு என வைத்தால் அதிலும் சிக்கன் பிரியாணி, தலைக்கு ரூ.200 என பணமும் கொடுத்து வந்த நிலையில், இந்த நிலையை விஜயின் மாநாடு மாற்றியிருப்பதாக தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

விஜய் நினைத்தபடியே மாநாட்டை நடத்திக் காட்டியதுடன், அம்மா நாட்டில் அதிரடியாக பேசி, திமுகவும், பாஜவும் எதிரி என்று சூழுரைத்தார். ஆனால், அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் அவரது படங்களான காவலன், தலைவா, மெர்சல் உள்ளிட்டவை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தபோது இப்படி எந்தவித ஆவேசமான கருத்துகள் கூறாமல், வீடியோக்கள் வெளியிடுவதும் அப்போதைய முதல்வர்களை சந்தித்துப் பேசுவதுமாகத்தான் இருந்தார் என விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

விஜய்யின் பேச்சு ஆளுங்கட்சிக்கு அதிருப்தியைக் கொடுத்த நிலையில், அஜித் துபாயில் கார் ரேஸிங் பங்கேற்று தமிழக விளையாட்டு சின்னத்தைப் பயன்படுத்தியதற்காக நன்றி கூறினர் திமுகவினர். இது விஜய்க்கு எதிராக அஜித்தை தங்கள் கட்சிக்கு வரவழைக்கவா, அல்லது அஜித்தின் ரசிகர்களைத் தங்கள் வசம் இழுக்கவா என தெரியவில்லை.

இருப்பினும் விஜய்யின் அரசியல் வருகை நேர்த்தியாகவும் அதேசமயம் பிரபல கட்சிகளுக்கு இணையாக இருந்ததால் அடுத்த தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அவர் டஃப் கொடுப்பார் என தகவல் வெளியாகிறது. விஜயகாந்திற்குப் பிறகு அரசியலில் திமுக, அதிமுக, பாஜகவை அதிகம் தாக்கிப் பேசியுள்ளார் விஜய்.

விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து

இந்த நிலையில், தவெக மாநாடு வெற்றியடைந்தது குறித்து விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி., அப்போது, நடிகர் விஜய்யின் மாநாடு வெற்றி பெற்றதற்கு வாழ்த்து என்று கூறினார். இது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கும், யார் படத்திற்கு அதிக வசூல் என ரஜினி, விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் தினமும் மோதல் நடந்து வரும் நிலையில், விஜய்க்கு ரஜினி வாழ்த்து கூறியுள்ளது சினிமாவிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

தவெகவின் அடுத்த திட்டங்கள்

ஏற்கனவே தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வந்த விஜய், அதை இன்னும் அதிகளவில் விரிவுபடுத்தவும், மக்களுக்குதன் கொடியும், கட்சியையும் கொண்டு சேர்க்கும் வகையில் சிந்தித்து வருகிறார்.

மேலும்சமீபத்தில் நடந்த தவெகவின் முதல் மாநாடு வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாநாடுகளை நடத்தி தன் பலத்தை காட்ட விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் 2026 ஆம ஆண்டு தேர்தலுக்குள் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending News