Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

72 வயதிலும் ஓய்வின்றி உழைக்கும் சூப்பர் ஸ்டார்.. அப்பா சம்பாத்தியத்தில் விஷ பரீட்சை செய்து பார்க்கும் மகள்

72 வயதிலும் ஓய்வின்றி உழைக்கும் சூப்பர் ஸ்டார்.. அப்பா சம்பாத்தியத்தில் விஷ பரீட்சை செய்து பார்க்கும் மகள்

வயதாவதற்குள் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருப்பது போல் தான் தெரிகிறது.

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். கிட்டத்தட்ட தன்னுடைய 72 வது வயதிலும், தமிழ் சினிமாவில் நான் தான் நம்பர் ஒன் ஹீரோ என்பதை நிரூபித்து விட்டார் ரஜினி. இந்த படத்தின் வசூல் கிட்டத்தட்ட 600 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் ரஜினியின் சம்பளம் 100 கோடி ஏற்றப்பட்டதோடு, அவருக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான காரையும் பரிசளித்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

முன்பெல்லாம் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் தான் நடிப்பார். ஆனால் தற்போது ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு ரஜினிக்கு அடுத்தடுத்து பட அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் சூப்பர் ஸ்டாரின் சினிமா மீதான காதல் வெளியில் தெரிந்தாலும், மறுபக்கம் வயதாவதற்குள் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் இருப்பது போல் தான் தெரிகிறது.

இதற்கு காரணம் அவருடைய இரண்டு மகள்கள் தான். சினிமாவில் அவர்கள் எடுத்து வைத்த அகல காலால் ரஜினி பட்டது ரொம்பவே அதிகம் என்று கூட சொல்லலாம். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் மூலம் ஏற்படுத்திய நஷ்டம் என்பது ரஜினி அதிலிருந்து மீள முடியாத ஒன்றாகவே அமைந்திருந்தது.

அதேபோன்றுதான் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும். தமிழில் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதன் பின்னர் அவருடைய காதல் கணவர் நடிகர் தனுஷ் உடன் ஆன விவாகரத்திற்கு பிறகு, மீண்டும் படம் பண்ணுகிறேன் என்ற பெயரில் அடுத்த வேலையை ஆரம்பித்து விட்டார். தற்போது லால் சலாம் என்னும் படத்தை இயக்கியிருக்கும் இவர், அந்த படத்தில் ரஜினியையும் கேமியோ ரோலில் நடிக்க வைத்திருக்கிறார்.

தற்பொழுது இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு உள்ளேயே ஐஸ்வர்யா அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தி இருக்கிறார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதையை படமாக்க இருக்கிறார்.

இந்த படத்தில் கங்குலியாக ஆயுஷ்மான் குரானா நடிக்க இருக்கிறாராம். ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றபின் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சௌந்தர்யாவும் வெப் சீரிஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். மகள்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக ரஜினி இந்த வயதிலும் நிற்க நேரமில்லாமல் ஓடி ஓடி சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.