சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வரை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர். ஒட்டு மொத்த இந்திய சினிமா நடிகர்களுமே வியந்து பார்க்கும் உச்ச நட்சத்திரமாக ரஜினி இருக்கிறார். இவரை தவிர வேறு எந்த ஹீரோவும் இத்தனை வயதிலும், இத்தனை ஆண்டுகள் கடந்தும் சினிமாவில் இதுபோன்ற ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இவர் மட்டுமே இன்றுவரை தனக்கான ஒரு இடத்தை கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறார்.
70 வயதிலும் அன்றைய காலகட்டத்தில் பார்த்த அதே சுறுசுறுப்பு மற்றும் அதே ஸ்டைலுடன் இருக்கிறார் ரஜினி. இவர் சினிமாவுக்கு ரொம்பவும் கஷ்டப்பட்டு போராடி வந்திருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட காலகட்டங்களில் சினிமாவே வேண்டாம் என்று வெறுத்தும் ஒதுக்கி இருக்கிறார். ஒரு பக்கம் உச்ச நட்சத்திரம் என்று அழுத்தம், ஒரு பக்கம் இடைவிடாத உழைப்பு இரண்டுமே சேர்ந்து அவரை சோர்வடையச் செய்தது.
Also Read:ரஜினியை விடாமல் துரத்தும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.. அடுத்த படத்திற்கு இப்படி ஒரு போட்டியா!
1985 லேயே தன்னுடைய நூறாவது திரைப்படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடலாம் என்று முடிவெடுத்த ரஜினி அதை தனக்கு பிடித்த ராகவேந்திரா கடவுளின் கதையாக எடுத்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சினிமாவும் ரஜினியை விடவும் இல்லை. இதனால் தொடர்ந்து படங்களில் நடித்து இன்று தன்னுடைய 169 வது படத்தின் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
2003 ஆம் ஆண்டு பாபா படம் தோல்வி அடைந்த பிறகு இனி ரஜினிகாந்த் நடிக்கவே மாட்டார் என்று ஒட்டுமொத்த சினிமா வட்டாரமும் ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் உண்மையிலேயே இவர் ஒரு குறிப்பிட்ட படத்தை தன்னுடைய கடைசி படமாக நினைத்து நடித்து முடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்று முடிவெடுத்ததாக அவருடைய நெருங்கிய நண்பரும், சினிமா இயக்குனருமான கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில், அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருந்த ராணா படத்தை தான் ரஜினி தன்னுடைய கடைசி படமாக நினைத்து இருக்கிறார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னுடைய இத்தனை வருட வெற்றிக்கு யார் யார் காரணமாக இருந்தார்களோ அத்தனை பேரையுமே அழைத்திருந்தாராம் ரஜினி.
ஆனால் படத்தின் சூட்டிங் ஆரம்பித்து ஒரு சில நாட்களிலேயே ரஜினிகாந்த்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவர் சிங்கப்பூர் சென்று மாத கணக்கில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாலும், பொருளாதார சிக்கல்களினாலும் அந்த படம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ரஜினியும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராணா படத்தின் கதையையும் மீண்டும் கேட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் என இயக்குனர் கேஸ் ரவிக்குமார் சொல்லியிருக்கிறார்.
Also Read:ரஜினியை மரியாதை இல்லாமல் திட்டிய பிரபல நடிகை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்