செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மில்க் நடிகையை கூப்பிட்டு வார்னிங் செய்த சூப்பர் ஸ்டார்.. தனுஷால் சந்தி சிரித்த அவலம்

Dhanush- Amala Paul controversey: தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போன நடிகர் என்றால் அது தனுஷ் தான். எந்த அளவுக்கு சீக்கிரமாக வளர்ந்து வந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளையும் தன்னோடு சேர்த்துக் கொண்டவர். தன்னுடன் நடித்த நடிகைகளுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனான திருமண வாழ்க்கையை அதிகாரபூர்வமாக முறிவு செய்வதாக கூட அறிவுத்திருந்தார். விவாகரத்திற்கு பின்னும் இவரை சுற்றிய சர்ச்சைகள் முடிந்தபாடில்லை.

தனுஷின் மீது ரசிகர்கள் அதிருப்தி கொள்ளும் அளவிற்கு வெளியான சர்ச்சை தான் நடிகை அமலா பால் உடன் அவர் காதலில் இருப்பதாக வந்த செய்தி. அமலா பால் ஏற்கனவே இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்த பிறகு அவரை விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்திற்கு முழு காரணமும் தனுஷ் தான் என அப்போது செய்திகள் வெளியாகின.

Also Read:கருப்பு அழகியாய் சினிமாவில் சாதித்து காட்டிய 5 நடிகைகள்.. ரஜினியை, மருமகளாய் புரட்டி எடுத்த சரிதா

விவாகரத்திற்கு பிறகு அமலா பால் முழுக்க முழுக்க தனுஷ் உடன் வாழ ஆரம்பித்திருக்கிறார். இதனால் தனுஷ் மாத கணக்கில் வீட்டிற்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இது பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய அப்பா ரஜினிகாந்திடம் முறையிட, சூப்பர் ஸ்டார் நேரிடையாகவே இந்த பிரச்சனையில் தலையிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி தன் மகளுக்காக நேரிடையாக களத்தில் இறங்கி அமலா பாலிடம் பேசி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமலாபாலிடம் மிரட்டும் துணியில் பேசியது அப்போது வதந்தியாக பல மீடியாக்களின் செய்திகளாக வெளியாகி இருந்தாலும், தற்போது அந்த சம்பவம் உண்மை என்று பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார். சூழ்நிலையை புரிந்து கொண்ட அமலாபால் நடிகர் தனுஷை விட்டு விலகியும் இருக்கிறார். ஆனால் அதன் பின்னரும் அமலபால் வாழ்க்கையில் ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read:வெளியில் கசிந்த லோகேஷ் ரஜினி பட அப்டேட்.. தலைவர் கொடுத்த செம ஐடியா

விவாகரத்திற்கு பிறகு சினிமாவை மட்டுமே வாழ்க்கையாக நம்பி இருந்த அமலாபாலுக்கு, மறைமுகமாக தமிழ் சினிமாவில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அமலா பாலுக்கு எந்த பட வாய்ப்புகளும் அமையாத வண்ணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு முழு காரணமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றுதான் சொல்லப்படுகிறது. மகளுக்காக, ரஜினி இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.

இப்படி ஸ்ருதிஹாசன் தொடங்கி அமலாபால் வரை தனுஷ் உடன் காதலில் இருந்து நடிகைகளிடம் பஞ்சாயத்து பேசி ஓய்ந்து போயிருக்கிறது ரஜினிகாந்த் குடும்பம். இதனால் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட்டு பிரியும் முடிவையும் எடுத்திருப்பதாக தெரிகிறது. தனுஷ் மற்றும் சினிமாவை நம்பி காதல் கணவரை ஒதுக்கி விட்டு வந்த அமலா பாலின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகவே மாறிவிட்டது.

Also Read:கன்னட நடிகரை கொக்கி போட்டு இழுக்கும் லோகேஷ்.. கமுக்கமாக கட்டளை போட்ட ரஜினி

Trending News