தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ளவர் ரஜினிகாந்த். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவருக்காக எதையும் செய்யும் அளவுக்கு இவரின் மீது தீராத பக்தியுடன் இருக்கும் ரசிகர்களும் உண்டு.
அந்த அளவுக்கு உலகம் முழுவதிலும் பிரபலமாக, புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிக்கு இந்த இடம் மிக சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. ஒரு பஸ் கண்டக்டர் ஆக இருந்த இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.
ஒரு வில்லனாக சாதித்து காட்டிய இவருக்கு அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகளும் வரத் தொடங்கியது. அதன் மூலம் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி இன்று பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு அந்தஸ்தில் இவர் இருக்கிறார்.
மேலும் இவருடைய திரைப்படங்கள் வெளிவருகிறது என்றாலே பல முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களை வெளியிட தயங்குவார்கள். அந்த அளவுக்கு இவர் வசூல் நாயகனாக பாக்ஸ் ஆபிஸை கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி இவருடைய வாழ்க்கையில் பல வெற்றிகளை ருசித்து வந்த இவருக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
அதாவது இவருடைய வளர்ச்சி மற்றும் வெற்றியின் ரகசியங்கள் பற்றி பல விஷயங்களும் பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சிபிஎஸ்சி பாட திட்டத்தில் சூப்பர் ஸ்டார் கடந்து வந்த வாழ்க்கை பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
இத்தகைய ஒரு பெருமை இதுவரை எந்த நடிகருக்கும் கிடைத்தது கிடையாது. இதனால் தமிழ் சினிமா தற்போது சூப்பர் ஸ்டாரை நினைத்து மிகுந்த பெருமை படுகிறது. அந்த வகையில் நம் தமிழ் சினிமாவை பார்த்து பக்கத்து மாநில திரையுலகினர் சற்று பொறாமையில் இருக்கின்றனர்.