நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நல்ல நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்றும் அதனால் அவருக்கு நல்ல உயர்ந்த குணங்கள் கொண்டவராக அவர் விளங்குகிறார் என்று அவரது ரசிகர்கள் எப்போதும் சொல்வதுண்டு. அப்படி உயர்ந்த குணம் கொண்ட ரஜினிகாந்த் பல உதவிகளையும் தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அது எதுவும் வெளிப்படையாக தெரிவதில்லை.
எப்போதும் பழைய விஷயத்தை மறக்காத ரஜினிகாந்த், அவர்கள் ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஹீரோ கதாபாத்திரம் கிடைக்குமா..? ஹீரோ கதாபாத்திரம் அவருக்கு வருமா..? என்று அவரை யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை நம்பி திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் பைரவி திரைப்படத்தின் கதாசிரியர் கலைஞானம்.
இன்று சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய ரஜினிகாந்த் அப்போது, பத்தோடு பதினோராவது கதாபாத்திரத்தில் நடிக்கும் சாதாரண நடிகராக திரையுலகில் அறிமுகமானார். அப்படிப்பட்ட நடிகரை வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் ஆகியவற்றில் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஹீரோவாக எப்போதும் நினைத்து பார்க்கவில்லை. அவரை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தது இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் அந்த படத்தின் கதாசிரியர் கலைஞானம் தான். அவர்கள் எதிர்பார்த்தது போலவே , ரஜினிகாந்த்தின் அறிமுக படமான பைரவி திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அந்த நன்றியை மறக்காத ரஜினிகாந்த் அவர்கள் தற்போது கலைஞானம் இருக்கும் நிலையைக் கண்டு அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்தின் உழைப்பாளி படத்தில் பணியாற்றிய டெக்னீசியன்களுக்காக, ரஜினிகாந்த் , படம் நடித்து வரும் லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க சொல்லி இருக்கிறார்.
தன்னுடைய சம்பளத்தை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டு அதன் பிறகு படத்திற்கு வரக்கூடிய லாபத்தை அனைவருக்கும் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனால் இந்த படத்தில் பணியாற்றிய டெக்னீசியன் களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கிடைத்து இருக்கிறது.
அதன் மூலம்தான் அவர்கள் வீடு கட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ரஜினிகாந்த் பல நன்மைகள் செய்திருந்தாலும் வெளியில் எதுவும் தெரிவதில்லை. ஆனால் அதை தற்போது காற்றில் பறந்த செய்தியாக வந்து சேர்ந்திருக்கிறது. ரஜினிகாந்தின் உயர்ந்த குணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் இந்த தகவலை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.