தத்தளிக்கும் லைக்கா.. கரை சேர்க்க போராடும் ரஜினி

Rajini : லைக்கா நிறுவனம் தமிழ் சினிமாவில் சிறிது காலத்திலேயே ஒரு பிரம்மாண்ட நிறுவனமாக மாறியது. லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் பெரிய ஹீரோக்களின் படங்களை அடுத்தடுத்து தயாரித்து வெற்றி கண்டார்.

விஜய்யின் கத்தி, மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன், தனுஷின் வடசென்னை ஆகிய படங்களை தயாரித்திருந்தார். இப்படி கொடிகட்டி பறந்த நிறுவனத்திற்கு கடந்த சில வருடங்களாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

பெரிய பட்ஜெட் படங்களான லால் சலாம், கமலின் இந்தியன் 2 மற்றும் அஜித்தின் விடாமுயற்சி ஆகிய படங்கள் பெரும் நஷ்டத்தை கொடுத்தது. இதனால் இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது.

லைக்கா உடன் கைகோர்க்கும் ரஜினி

இப்போது இந்தியன் 3 படத்தை உதயநிதி ரெட் ஜெயண்ட் உடன் கைகோர்த்து தயாரித்து வருகிறது. மேலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படமும் லைக்கா கைவசம் தான் இருக்கிறது.

லைக்கா நிதி நெருக்கடியால் தத்தளித்து வரும் நிலையில் ரஜினி கை கொடுக்கப் போகிறாராம். அவர் நடித்த வேட்டையன் படம் சற்று ஆறுதலாக லைக்காவுக்கு அமைந்தது. இதை அடுத்து மீண்டும் ஒரு படத்தை லைக்காவிற்காக ரஜினி நடித்து கொடுக்கப் போகிறார்.

இப்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் ரஜினியின் கைவசம் இருக்கிறது. இந்த படங்களை முடித்து விட்டு லைக்கா உடன் கைகோர்க்க போகிறார். மேலும் ஒரு சிறந்த இயக்குனரை லைக்கா நிறுவனம் இந்த படத்திற்காக தேடித் தருகிறது.

Leave a Comment