Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வேள்பாரி வாய்ப்புக்காக சங்கருக்கு தூதுவிட்ட உச்ச நட்சத்திரம்.. இசையமைப்பாளர் கூட முடிவாயிடுச்சாமே!

வேள்பாரி வாய்ப்புக்காக சங்கருக்கு தூதுவிட்ட உச்ச நட்சத்திரம்.. இசையமைப்பாளர் கூட முடிவாயிடுச்சாமே!

Director Shankar: இயக்குனர் சங்கர் வேள்பாரி கதையை படமாக்க இருக்கிறார் என கடந்த சில வருடங்களுக்கு முன்பே செய்திகள் கசிந்தது. தற்போது எந்திரனுக்குப் பிறகு வேள்பாரி தான் என்னுடைய கனவு படம் என சங்கர் நேற்று நடந்த புத்தக […]

Director Shankar: இயக்குனர் சங்கர் வேள்பாரி கதையை படமாக்க இருக்கிறார் என கடந்த சில வருடங்களுக்கு முன்பே செய்திகள் கசிந்தது. தற்போது எந்திரனுக்குப் பிறகு வேள்பாரி தான் என்னுடைய கனவு படம் என சங்கர் நேற்று நடந்த புத்தக விழாவில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து வரலாற்று கதைகள் இந்திய சினிமாவில் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் தான் ஷங்கர் இந்த ஒரு முடிவை எடுத்திருக்கிறார். வேள்பாரி புத்தக பதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை ஆக்கிக் கொண்டிருக்கும் சிறப்பை கொண்டாடும் வகையில் நேற்று விழா வைக்கப்பட்டது.

தூதுவிட்ட உச்ச நட்சத்திரம்

இந்த விழாவில் சங்கருடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய ஓய்வு நாளில் படிப்பதற்காக நான் வேள்பாரி புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன் என சொல்லி இருந்தார். இதைத் தாண்டி இன்னொரு விஷயமும் நடந்திருக்கிறது.

இந்த வரலாற்று கதையை படமாக்க எப்படியும் ஆயிரம் கோடி பட்ஜெட் தேவைப்படும். ஷங்கர் இதுவரை அதிகபட்ச பட்ஜெட் போட்டு லாபம் கொடுத்தது ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் தான்.

இதனால் மீண்டும் தன்னுடைய கனவு படத்திற்காக சங்கர் ரஜினியுடன் கைகோர்க்க இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ரஜினிகாந்தின் கூலி பட வேலைகள் முடிவடைந்த கையோடு இந்த அறிவிப்பு வெளியாகலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.