வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ரஜினிகாந்தின் ஒரு கடிதத்தில் மாறிப்போன ராகவா லாரன்ஸின் தலையெழுத்து.. தலைவா நீங்க கிரேட்!

தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகரின் வெளிச்சம் நம் மீது பட்டால் நமக்கும் அந்த நடிகருக்கு கிடைக்கும் புகழ் கிடைக்கும் என்று பல நடிகர்கள் உச்ச நட்சத்திரங்களோடு நடிக்க ஆசைப்படுவார்கள். அதேபோல சில பெரிய நடிகர்களின் சிபாரிசு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. ஒருவரின் உண்மையான திறமை அறியாமல் எந்த ஒரு நடிகரும் மற்றொரு நடிகருக்கு சிபாரிசு செய்ய தயங்குவார்கள்.

அதுவும் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் போன்ற நடிகர்கள் ஒருவருக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்றால் உண்மையில் அவர் திறமைசாலியாக இருந்தாக வேண்டும். இல்லை என்றால் அவர் செய்த சிபாரிசும் பயனற்றதாக மாறிவிடும். டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என்று பல முகங்களை கொண்டு தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் ராகவா லாரன்ஸ்.

இவர் இன்று முன்னணி நடிகராகவும் சிறந்த டான்ஸ் மாஸ்டராக வலம் வருகிறார். அதுபோக பல்வேறு உதவிகளையும் ஏழை எளிய மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இவர் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும் இவரின் வாழ்க்கை இப்படி இருக்க ஒரு திருப்புமுனையாக அமைய மிக முக்கிய காரணமாக இருந்ததும் அதே ரஜினிகாந்த் தான்.

ராகவா லாரன்ஸின் ஆரம்பக் காலகட்டத்தில் அவர் சினிமாவில் நுழைய வேண்டும் என்பதற்காக சண்டை பயிற்சியாளராக இருந்த சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளராக சேர்ந்து கொண்டார். இருந்தாலும் தன் மனதில் தான் ஒரு டான்ஸ் மாஸ்டராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அப்படி இருக்கும்போது தான் லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்றும் சூப்பர் சுப்பராயனுக்கு தெரியவந்தது.

அதன் பின்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்காந்த்தை சந்திப்பதற்காக சூப்பர் சுப்பராயன் மற்றும் ராகவா லாரன்ஸ் என இருவரும் சென்றிருக்கின்றனர். அப்போது ராகவா லாரன்சை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அறிமுகப்படுத்தி தம்பி நல்லா டான்ஸ் ஆடுவான் டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என நினைக்கிறான் நீங்கள் மனது வைத்தால் அது நடக்கும் என்று கூறியிருக்கிறார் சூப்பர் சுப்புராயன். உடனே ரஜினி அவர்கள் ஒரு சிபாரிசு கடிதத்தை எழுதி ராகவா லாரன்சிடம் கொடுத்திருக்கிறார்.

அந்தக் கடிதம்தான் லாரன்ஸின் வாழ்க்கையை அப்படியே மாற்றிவிட்டது. அதன்பின் பலப் படங்கள் அவருக்கு நடன இயக்குனராக வாய்ப்பு கிடைக்க, அவர் நடனத் துறையில் மிகப்பெரிய சாதனைகளை சாதிக்க முடிந்தது. அதன் பின் அவருடைய சொந்த முயற்சியால் நடிப்பு இயக்கம் என படிப்படியாக முன்னேறி பிறருக்கு உதவும் மனப்பான்மையினால் மக்கள் மனதையும் வென்று எடுத்தார்.

இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், ரஜினிகாந்த் அவர்கள் ராகவேந்திராவின் தீவிர பக்தர். அதேபோல ராகவா லாரன்ஸும் தீவிர பக்தராக மாறியதற்கு இந்த நிகழ்வும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ரஜினிகாந்தை சந்தித்து கடிதம் பெற்றது அதன் பின் இவருக்கு கிடைத்த வாய்ப்பு என்ற இந்த இரண்டு நிகழ்வும் நடந்தது வியாழக்கிழமை அன்று. வியாழக்கிழமை ராகவேந்திரா விற்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

அதன்பின் ராகவா லாரன்ஸ் எந்த ஒரு செயலை செய்தாலும் அதனை வியாழக்கிழமைதான் ஆரம்பிப்பார் என்று சொல்லப்படுகிறது. ராகவா லாரன்ஸின் வாழ்க்கை சென்டிமென்ட்க்கு மேல் சென்டிமென்டாக இருக்கிறது. அப்படி இன்று சென்டிமென்டாக பல படங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

Trending News