வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அடுத்த லிஸ்டில் ரெடியான சொகுசு கார்.. ரஜினி, சன் டிவியிடம் சிபாரிசு செய்த அந்த இரண்டு நபர்கள்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி என்பது பட குழு திட்டமிட்டதை விட, பல மடங்கு அதிகமாகவே இருக்கிறது. ஜெயிலர் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் என்று தற்போது சொல்லப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் வசூல் கிட்டத்தட்ட 550 கோடியை தாண்டி விட்டது. விரைவில் இது 600 கோடியை நெருங்கும் என பிரபலங்களால் கணிக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வெற்றியை போல் ஒரு வெற்றியை பார்த்து விட வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் தற்போது அதைவிட பல மடங்கு வெற்றியைப் பெற்று வசூல் வேட்டை ஆடி வருகிறது ஜெயிலர்.

Also Read:ஜெயிலருக்கு அதிர்ஷ்ட தேவதையாக கொட்டிக் கொடுத்த நடிகை.. கடைசியா ஒண்ணுமே இல்லாமல் வெறும் கையில் நிற்கும் பரிதாபம்

படத்தின் இந்த வரவேற்பை பார்த்து ஒட்டுமொத்த பட குழுவும் எதிர்பாராத உற்சாகத்தில் இருக்கிறார்கள். பட விழா கொண்டாட்டமும் அவ்வப்போது பிரபலமான இடங்களில் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சனை நேரில் சந்தித்து அவர்களுக்கு காசோலை கொடுத்ததோடு, விலை மதிக்கத்தக்க காரையும் பரிசளித்திருக்கிறார்.

ஜெயிலர் படத்தின் சம்பளமாக ஏற்கனவே ரஜினிக்கு 110 கோடி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் லாபத்தின் ஒரு பங்காக ரஜினிக்கு சுமார் 100 கோடி காசோலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் 210 கோடி சம்பளம் வாங்கும் முதல் ஹீரோவாக ரஜினி இருக்கிறார்.

Also Read:வசூல் வேட்டையாடும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. மிரள வைக்கும் 3வது வார ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பட வெற்றியின் பங்களிப்பில் பலரும் காரணமாக இருக்கும் நிலையில் ரஜினி மற்றும் நெல்சனுக்கு மட்டும் கார் பரிசளித்திருப்பது எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மகிழ்ச்சி தன்னோடு முடிந்து விடக்கூடாது என நினைத்து, இந்த பரிசுக்காக இன்னும் இரண்டு பிரபலங்களை சன் டிவியிடம் சிபாரிசு செய்து இருக்கிறார்.

படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் விநாயகத்திற்கு கார் பரிசளிக்க வேண்டும் என ரஜினி சிபாரிசு செய்து இருக்கிறார். அதேபோல் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தையும் சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் சன் பிக்சர்ஸ் சார்பில் இவர்கள் இருவருக்கும் விலை மதிக்கத்தக்க சொகுசு கார் பரிசாக கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:ஜெயிலர் கொடுத்த உத்வேகம்.. ரஜினிக்கு வரிசைகட்டி நிற்கும் 3 படங்கள்

 

Trending News