ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய பிரபலம்.. இன்று வரை யாராலும் வெல்ல முடியாத பட்டம்

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். பல வருடங்களாக ரஜினிகாந்த் அவரின் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று தான் கொண்டாடப்பட்டு வருகிறார். அவ்வளவு ஏன் இன்றுவரை யாராலும் இந்த பட்டத்தை தட்டிப் பறிக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு முதன் முதலில் கொடுத்தது யார் என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றிய பெருமை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு மட்டும்தான் உண்டு.

Also read: வரலாற்று கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்.. வாய்ப்பளிக்க தவறிய மணிரத்னம்

அவர் தயாரிப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பே விளம்பர வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பைரவி திரைப்படத்தின் போஸ்டர்களை இவர் தான் டிசைன் செய்திருக்கிறார்.

1978 ஆம் ஆண்டு ரஜினி, ஸ்ரீகாந்த், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பைரவி. அதில் ரஜினி மூக்கையா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளிவருவதற்கு முன்பு சில போட்டோக்கள் போஸ்டருக்காக தாணுவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: ரஜினிகாந்த் என்னும் பந்தயக் குதிரை.. சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றுக் கொடுத்த முதல் படம்

அதில் ரஜினி பாம்பை தலையில் அடிப்பது போன்றும், துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போன்றும், ஆட்டுக்குட்டியை ஸ்டைலாக தூக்கி கழுத்தில் வைத்திருப்பது போன்ற ஏகப்பட்ட போட்டோக்கள் இருந்திருக்கிறது. அந்த போட்டோக்களை பார்த்த தாணு வியந்து போயிருக்கிறார்.

அப்போது அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று கூறியிருக்கிறார். அதன்படியே போஸ்டரும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இதை கேள்விப்பட்ட ரஜினி, எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கும்போது எனக்கு இப்படி ஒரு பட்டத்தை கொடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Also read: சினிமாவை விட்டு போக நினைத்த ரஜினிகாந்த்.. மீண்டும் கூட்டிட்டு வந்த பிரபல நடிகர்

ஆனாலும் கேட்காத தாணு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அந்த படத்தை விளம்பரப்படுத்தி இருக்கிறார். அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களிலும் சூப்பர் ஸ்டார் என்ற பெயரே போடப்பட்டது. இதுதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறிய வரலாறு. ஒருவகையில் இந்த பட்டம் அவருடைய உழைப்புக்கும், நடிப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய பரிசு. அதனால்தான் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

Trending News