Ajith Kumar: சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு படத்தின் வெற்றி மற்றும் தோல்வியை எந்த கொம்பனாலும் கணிக்க முடியாது. லவ் டுடே மாதிரியான லோ பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் தலையில் தூக்கி வைக்கப்பட்டு கொண்டாடப்படும்.
அதே மாதிரி இந்தியன் 2, கங்குவா போன்ற ஹை பட்ஜெட் படங்களை கண்டுகொள்ளாமலும் கடந்து விடுவார்கள். அப்படித்தான் ரஜினிகாந்த் அஜித்தின் ஒரு படத்தின் வெற்றியைப் பார்த்து மலைத்துப் போய் இருக்கிறார்.
ரஜினி பொதுவாக ஒரு படம் தனக்கு பிடித்துப் போனால் அந்த இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டக்கூடியவர். அப்படித்தான் அஜித் பட இயக்குனர் ஒருவரை அழைத்து பேசிய போது இந்த படம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரிந்திருந்தால் நானே நடித்து இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
அஜித் படத்தின் வெற்றி
குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்பு ரீமேக் படங்கள் பெரிய அளவில் உருவாகத் தொடங்கின. அதில் முக்கியமாக இந்த ட்ரெண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த பில்லா படம் தான்.
இந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன் என விஷ்ணுவரதன் ரஜினியிடம் சொல்லும் பொழுது, நீங்கள் இந்த படத்தை எப்படி கொண்டு வரப் போகிறீர்கள் என்ற ஐடியா எனக்கு சுத்தமாக இல்லை என்று சொன்னாராம். ஆனால் இந்த படம் அஜித் நடிப்பில் அதற்கு முந்தைய வருடம் ரிலீஸ் ஆகிய சூப்பர் ஹிட் அடித்த வரலாறு படத்தின் வசூலையே முறியடித்திருக்கிறது.
படத்தின் பெரிய பாசிட்டிவாக அமைந்தது பழைய பில்லா படத்தில் இருந்து மீண்டும் ரீமேக் செய்யப்பட்ட மை நேம் இஸ் பில்லா மற்றும் வெற்றிலையை போட்டேன்டி பாட்டுகளும் தான். இந்தப் படம் 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு, 64 கோடி வசூல் செய்திருக்கிறது. அஜித்திற்கு இன்று வரை பெயர் சொல்லும் படமாக இது இருக்கிறது.