அக்டோபர் பத்தாம் தேதி படம் கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வாங்கி விநியோகம் செய்கிறது. முதல் முதலாக ரஜினி மற்றும் ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இந்த படத்தில் இணைகின்றனர்.
கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் போன்று கதைகளை வித்தியாசமாக எழுதுபவர் ஞானவேல். பெரும்பாலும் உண்மை சம்பவங்களை குறி வைக்கும் இவர் இம்முறை ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இவர் படங்களில் எப்பொழுதுமே தனித்துவம் இருக்கும் ஆனால் ரஜினியுடன் தற்சமயம் இணைந்துள்ளது பெரிய ஆச்சரியத்தை கிளப்பி உள்ளது.
ஜெய்பீம் படத்தால் மிகவும் கவரப்பட்ட ரஜினி இவரை அழைத்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். எப்பொழுதுமே ரஜினி தன்னை நம்பி படம் எடுப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என தன்னுடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் கமர்சியல் படங்களையே அதிகம் விரும்புவார் ஆனால் இந்த முறை கதையே வேறு.
என் வழி தனி வழின்னு எல்லாத்தையும் மறந்த சூப்பர் ஸ்டார்
ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் இது முழுக்க முழுக்க ஞானவேல் படம் தான். ரஜினி அவருடைய பாதையை மாற்றிவிட்டார் என ஒரு பக்கம் சலிப்பும் மறுபக்கம் சிலாகித்தும் வருகின்றனர். மினிமம் கேரண்டியாவது இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ரஜினி இந்த முறை ஞானவேலுவிடம் படம் முழுவதையும் ஒப்படைத்து விட்டார்.
ரஜினி படத்துக்கே ஊறிய ஸ்டைல், பரபரப்பு எதுவுமே இந்த பட ட்ரெய்லரில் இல்லை. இதை வைத்து பார்க்கையில் மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்துள்ளார் ரஜினி என்பது தெளிவாக தெரிகிறது. வேட்டையன் படம் போலீஸ் அதிகாரிகள் நடத்தும் என்கவுண்டர் கதை. இப்பொழுது ரஜினி வழி தனி வழி என்பதை மாற்றிவிட்டார்.
- வயசானாலும் சீற்றம் குறையாத சிங்கமாய் ரஜினிகாந்த்
- லைக்காவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரஜினிகாந்த்
- பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்