திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வனிதா மகள் ஜோவிகாவுக்கு செய்யாததை ஸ்ரீ ஹரிக்கு செய்த ரஜினி.. மேடையில் ஓவரா புகழ்ந்து பேசிய நாட்டாமை!

Rajinikanth: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்திலிருந்து அடுத்த சினிமா வாரிசு களம் இறங்கி இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தமட்டிலும் நடிகர் விஜயகுமாரின் குடும்பம் தான் பெரிய சினிமா குடும்பம். விஜயகுமார், மஞ்சுளா, அருண் விஜய், கவிதா, வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என அத்தனை பேருமே சினிமாவில் தங்கள் முகத்தை காட்டி விட்டார்கள்.

இதில் விஜயகுமாரின் பேத்தி தியா சினிமாவுக்கு வருவார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். யாருமே எதிர்பார்க்காத அவருடைய பேரன் ஸ்ரீ ஹரி பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீ ஹரி வனிதாவுக்கும் அவருடைய முன்னாள் கணவர் ஆகாஷ்க்கும் பிறந்தவர். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஸ்ரீஹரி முழு கவிதை குமார் பொறுப்பில் தான் வளர்க்கப்பட்டார். லண்டனில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என சினிமா சம்பந்தமாக எல்லாமே படித்து முடித்திருக்கிறார்.

அவரை விஜயகுமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஸ்ரீஹரி என்னவெல்லாம் படித்திருக்கிறார் என்பதை சொல்லி என் பேரனை எந்த துறையை தேர்ந்தெடுக்க சொல்லலாம் சொல்லுங்கள் என கேட்டு இருக்கிறார்.

அதற்கு ரஜினி ஹீரோவாக அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லி இருக்கிறார். அப்போது விஜயகுமார் இயக்குனர் பிரபு சாலமன் சிங்கத்தை வைத்து ஒரு கதை உருவாக்கி இருப்பதாகவும், அதில் ஸ்ரீஹரியை நடிக்க கேட்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

அப்போது ரஜினி அந்த கதை முழுவதும் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிரபு சாலமனிடம் போனில் பேசி கிட்டத்தட்ட 30 நிமிடங்களில் அந்த படத்தின் முழு கதையையும் கேட்டிருக்கிறார்.

பின்னர் விஜயகுமாரிடம் பேசிய ரஜினிகாந்த் அந்த படத்தின் ஒவ்வொரு சீனையும் அவ்வளவு ஞாபகமாக சொல்லி கதை நன்றாக இருக்கிறது என்று சொன்னாராம். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் தான் ஆசியாவிலேயே முதன்முறையாக நிஜ சிங்கத்தை வைத்து படம் எடுக்கிறார்கள்.

ஸ்ரீஹரியின் இந்த சினிமா பிரவேசம் குறித்து இதுவரைக்கும் வனிதா வாயை திறக்கவில்லை. வனிதா தன்னுடைய மகள் ஜோவிகாவை சினிமாவில் இறக்க முழுமூச்சுடன் இறங்கி இருக்கிறார். பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர் அவருடைய டீன்ஸ் படத்திலும் நடித்தார்.

இந்த விஷயத்தில் ஸ்ரீஹரிக்கு செய்ததை ரஜினி வனிதாவிடம் வளரும் ஜோவிகாவுக்கு செய்யவில்லை. ரஜினி தன்னுடைய பேரன் மீது அக்கறை எடுத்துக் கொண்டதை விஜயகுமார் மேடையில் ஆஹா ஓஹோ என்று பெரிய அளவில் பேசியிருந்தார்.

Trending News