Rajinikanth: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றதை தமிழ்நாட்டில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ட்விட்டர் பக்கம் போனாலே ரஜினி பற்றி தான் ஒரே புகழாரம். அரசியலே வேண்டாம், சினிமா மட்டுமே போதும் என ரஜினி ஒதுங்கி இருந்தாலும் அவரை இந்த அரசியல் விட்ட பாடு இல்லை போல.
தற்போது ஆந்திர அரசியலில் முக்கியமான ட்விஸ்ட்டை ஏற்படுத்தியது ரஜினி தான் என்று ரஜினி ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்னதான் நடந்து இருக்கும் என பொதுமக்களுக்கு சந்தேகம் வரத்தான் செய்கிறது.
நேற்றைய ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் முடிவில் சந்திரபாபு நாயுடு ஜெயித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை முடிவெடுக்கும் அதிகாரமே அவரிடம் இருக்கும் சூழ்நிலை தான் இப்போது இருக்கிறது.
யப்பா! இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே
அப்படி இருக்கும் பட்சத்தில் இதற்கெல்லாம் ரஜினி காரணம் என சொல்லப்படுகிறது. சரி என்ன தான் நடந்திருக்கிறது என எல்லோருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வமும் இருக்கும். கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் NT ராமா ராவ் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
அந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார். சந்திரபாபு நாயுடு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி, மக்களுக்கு சேவை செய்வதை பற்றியே எப்போதும் யோசிக்க கூடியவர் என்றெல்லாம் பேசி இருந்தார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இது போன்ற ஒரு சூழ்நிலையில் ரஜினி படி பேசியது ஆந்திர அரசியலில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அவருடன் ஜோடி போட்டு நடித்த ரோஜா ரஜினி ஒரு ஜீரோ என்று ரொம்பவும் வன்மமான கருத்தை கூட தெரிவித்திருந்தார்.
அப்போதெல்லாம் அமைதி காத்துக் கொண்டிருந்தார் ரஜினி ரசிகர்கள், சந்திரபாபு நாயுடு ஜெயித்ததும் தங்களுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் எங்கள் சூப்பர் ஸ்டாரின் பவர் என்று சும்மா இருந்த ரஜினியை மீண்டும் அரசியலில் இழுத்து விட்டிருக்கிறார்கள்.
ரஜினியின் சமீபத்திய அப்டேட்டுகள்
- இமய மலைக்கு நிம்மதியை தேடி சென்ற சூப்பர் ஸ்டார்
- வரப்போகுது சூப்பர் ஸ்டாரின் பயோபிக்
- மகள்களுக்காக மாடாய் உழைக்க ரெடியான சூப்பர் ஸ்டார்