Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தலைவர் அடித்த அந்தர்பல்டி.. தக் லைஃப் படத்தால் சிக்கலில் மணிரத்னம்

தலைவர் அடித்த அந்தர்பல்டி.. தக் லைஃப் படத்தால் சிக்கலில் மணிரத்னம்

Mani Ratnam : மணிரத்னம் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என பலரும் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே இப்போது மாறிவிட்டது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை மணிரத்னம் கொடுத்திருந்தார். இதையடுத்து கமல், சிம்பு ஆகியோரை […]

Mani Ratnam : மணிரத்னம் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என பலரும் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே இப்போது மாறிவிட்டது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை மணிரத்னம் கொடுத்திருந்தார்.

இதையடுத்து கமல், சிம்பு ஆகியோரை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்திருந்தார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் மோசமான விமர்சனங்களை பெற்று வந்தது. மணிரத்னத்தின் டைரக்ஷனா இது என ஆச்சரியப்படும் அளவுக்கு தான் இருந்தது.

ஏனென்றால் இவ்வளவு ஒரு மொக்கையான கதையை எப்படி எடுத்தார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் ரஜினியுடன் மணிரத்னம் இணைவதாக இருந்தது. இவர்களது கூட்டணியில் ஏற்கனவே தளபதி படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

தக் லைஃப் படத்தால் ரஜினி எடுத்த முடிவு

ஆனால் இப்போது தக் லைஃப் படத்தின் விமர்சனத்தினால் ரஜினி மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இப்போது தான் ரஜினி ஜெயிலர், வேட்டையன் படங்களில் வெற்றி கொடுத்து கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படி ரஜினி மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது மணிரத்னத்துடன் இணைந்தால் என்னவாகும் என்ற தயக்கத்தில் தலைவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பீஸ்டு படத்தின் தோல்வியின் போது நெல்சனுக்கு ரஜினி வாய்ப்பு கொடுத்தார்.

அந்த நன்றி கடனுக்காக ஜெயிலர் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ரஜினிக்கு நெல்சன் கொடுத்திருந்தார். நெல்சன் மீது வைத்த நம்பிக்கையை மணிரத்னம் மீது ரஜினி வைக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.