Rajini : சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் ஆவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் விஜய்யின் நடிப்பில் உருவான சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
ரஜினியின் தயாரிப்பாளரும் ஒரு படத்தை மறு வெளியீடு செய்ய இருக்கிறார். ஏற்கனவே பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவி நஷ்டத்தை கொடுத்தது.
ஆனால் மீண்டும் அந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்வதால் எந்த அளவுக்கு லாபம் எடுக்க முடியும் என்பது சந்தேகம்தான். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான படம் தான் கோச்சடையான்.
ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் படம்
தன்னுடைய ராஜா தந்திரம் மற்றும் வீரத்தால் ராஜ்ஜியத்தை கவிழ்க்கும் ஒரு பட தளபதியின் பழி வாங்கும் கதை தான் கோச்சடையான். இந்தப் படத்தில் கதாபாத்திரங்களை எல்லாம் ஒரு அனிமேஷ ன் போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
கோச்சடையான் படத்தின் கதை கே எஸ் ரவிக்குமார் எழுதியிருந்தார். திரைக்கதை நன்றாக இருந்தாலும் காட்சிப்படுத்துதல் ரசிகர்களை திருப்திபடுத்த தவறியது. இப்போது மீண்டும் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து படத்தின் காட்சிகளை மேம்படுத்த இருக்கிறார்களாம்.
படம் முழுக்க ஏஐ தொழில்நுட்பம் கொண்ட மாற்றப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்போது ரஜினியின் படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்து வருகிறது. ஜெயிலர், வேட்டையன் தொடர்ந்து இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார்.
அதனால் கோச்சடையான் படத்தை வெளியிட்டாலும் நல்ல லாபத்தை கொடுக்கும் என தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார். ஆனால் அது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது சந்தேகம்தான்.