சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறமையானவர்களை பாராட்ட என்றுமே தவறியது கிடையாது. இளம் வயதிலேயே சாதித்து காட்டும் இயக்குனர்கள், நடிகர்கள் முதல் தரமான திரைப்படங்கள் என்று அனைத்தையுமே அவர் மனம் நிறைந்து பாராட்டி விடுவார். பெரிய நடிகர் என்ற பாகுபாடெல்லாம் அவருக்கு கிடையாது.
அதனால்தான் அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த காந்தாரா திரைப்படத்தை பற்றி ரஜினிகாந்த் மெய் சிலிர்த்து போய் பாராட்டி இருக்கிறார். ரிஷப் செட்டி இயக்கி, நடித்திருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.
Also read : ரஜினி செய்த பெரிய தவறு.. செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன பாலச்சந்தர்
அதே நாளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு இந்த திரைப்படத்தை பற்றி அவ்வளவாக தெரியாமல் இருந்தது. ஆனால் போகப் போக இந்த படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைவரிடமும் படத்தைப் பார்க்கும் ஆவலை தூண்டியது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த திரைப்படம் இப்போது வரை 200 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படத்தை பற்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் புகழ்ந்து வந்தனர். இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினிகாந்த் தன்னுடைய கருத்துக்களை டிவிட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
Also read : ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த ஆணையம்.. தெளிவாக தெரியாமல் சூப்பர் ஸ்டார் பேசிய பேச்சு
அதாவது இப்படத்தில் இடம்பெற்று இருக்கும் ஒவ்வொரு காட்சியும் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது. தெரிந்ததை விட தெரியாதது அதிகம். இதைவிட சினிமாவில் யாரும் சிறப்பாக சொல்லி இருக்க முடியாது என்று அவர் பாராட்டி இருக்கிறார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடைய பதிவு வெளிவந்துள்ளது. அதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு ஜெயிலர் படத்தின் அப்டேட்டை விரைவில் கொடுங்கள் எனவும் அவர்கள் கேட்டு வருகின்றனர்.
Also read : இதுவரைக்கும் ரஜினி பேசாத ஒரே மொழி.. இப்ப வரைக்கும் முயற்சி பண்ணல