திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

தேவா, சுந்தர்.சி-யை ஏமாற்றிய ரஜினி.. பிரச்சனையை சமாளிக்க சூப்பர் ஸ்டார் போட்ட திட்டம்

ஒரு காட்சியை தன்னுடைய சாமர்த்தியத்தால் ஒரு நடிகன் எவ்வாறு கையாளுகிறான் என்பதை பொருத்தே அவனுடைய நடிப்பு பண்புகள் திரையில் பார்ப்பவர்களுக்கு தெரியும். அவ்வாறு தோன்றும் காட்சிகளில் தன்னுடைய தனி திறனால் மேம்படுத்தி தன்னை நிருப்பித்தவர் ரஜினிகாந்த்.

கடந்த 1995இல் ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வெளியான படம் அருணாச்சலம். ரஜினியின் ஈர்க்கும் நடிப்பு, தேவாவின் ஹிட் பாடல்கள், சுந்தர்.சியின் கதை என படத்தில் அனைத்துமே சிறப்பாக அமைந்தது பொருட்டு படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. சமீபத்தில் இதனை குறித்து இயக்குனர் சுந்தர்.சி ஒரு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

படத்தின் பாடல்களை தேவா தொகுத்து வந்த போது, ஓபனிங் சாங்காக ரசிகர்களுக்கு ஒரு பாடல் அமைக்கலாம் என சுந்தர்.சி கூற, அதற்கு ரஜினி மறுத்துள்ளார். பின்னர், ஒவ்வொரு படத்திலும் நீங்கள் மாட்டை பற்றியும், ஆட்டோக்காரர்களை பற்றியும் பாடி, நடந்து முடிந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய உங்கள் ரசிகனுக்கு ஒரு பாடல் வேண்டும் என தேவாவும், சுந்தர்.சியும், பாடலாசிரியரான வைரமுத்துவும் பேசி ரஜினியை சமாதானப்படுத்தி பாடல் அமைத்துள்ளனர்.

அந்த பாடலில் என் நெஞ்சில் குடியிருக்கும் தைரியம் நீதான் என ஒரு வரி இடம்பெறும். அதற்கு மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்ட ரஜினி நான் இந்த ஒரு வரியை மட்டும் லிங்கத்தை பார்த்து பாடுகிறேன் எனக் கூற, சுந்தர்சியும் ஒப்புக்கொண்டு படமாக்கி இருக்கின்றனர். பின்னர் அந்த காட்சியினை பார்க்கும் போது ரஜினி தன்னுடைய சாமர்த்தியத்தால் ரசிகனுக்காக எழுதப்பட்ட பாடலில் கூட தான் விரும்பும் கடவுளிடம் பாடுவது போல அமைத்திருந்தார் என சுந்தர்.சி கூறியுள்ளார்.

1977இல் அறிமுகமான ரஜினி 80களில் வெற்றி பெற்றாலும், 90களில் தான் மிகப்பெரிய இடத்திற்கு சென்றார். 1990களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் வரிசையாக வெற்றி அடைந்தன. மேலும் அப்பொழுது வெளியான படங்கள் தான் அவரை ஒரு கமர்சியல் மாஸ் நடிகராக, எவரும் தொட முடியாத உச்சத்தில் கொண்டு சேர்த்தது.

தமிழை தாண்டி நாடு முழுவதும் அவர் கோலோச்சிய காலம் அது. ஏன் செல்லப்போனால் வெளிநாடு வரைக்கும் சென்று வெற்றி கொடி நாட்டிய காலம் அது. சுந்தர்.சி இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன் சௌந்தர்யா, ரம்பா, ஜெய்சங்கர், ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

- Advertisement -spot_img

Trending News