வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

Lal Salaam Movie Review- மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய்.. லால் சலாம் எப்படி இருக்கு.? விமர்சனம்

Lal Salaam Movie Review: ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்து இருக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா, கபில்தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விளையாட்டை வைத்து நடக்கும் அரசியல் தான் படத்தின் மையக்கரு. 90 காலகட்ட கதையாக ஆரம்பிக்கும் இப்படத்தில் இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் இவர்களுக்குள் சிறு சிறு மனக்கசப்பு ஆரம்பிக்கிறது.

அதை அரசியல்வாதி ஒருவர் தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு பிரச்சனையை ஊதி பெரிதாக்குகிறார். அதை தொடர்ந்து ஊரில் மத கலவரம், வன்முறை வெடிக்கிறது. இந்த பிரச்சனையில் மொய்தீன் பாய் மகனாக வரும் விக்ராந்த் பாதிக்கப்படுகிறார். அதேபோல் ஊருக்குள் நடக்கும் தேர் திருவிழாவிலும் பிரச்சனை ஏற்படுகிறது.

Also read: சலாம் போட வைத்தாரா மொய்தீன் பாய்.? அனல் பறக்கும் லால் சலாம் ட்விட்டர் விமர்சனம்

இதை விஷ்ணு விஷால் சரி செய்ய முயற்சிக்கிறார். இதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? மொய்தீன் பாயாக வரும் ரஜினியின் தரப்பிலிருந்து இவருக்கு பிரச்சனை வந்ததா? இறுதியில் மொய்தீன் பாய் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் கதை. முழுக்க முழுக்க மத நல்லிணக்க பாடமாகத்தான் இப்படம் இருக்கிறது.

அதை இயக்குனர் ஐஸ்வர்யா காட்சிப்படுத்தி இருக்கும் விதமும், சில கருத்துக்களை நேரடியாக போட்டு உடைத்திருப்பதும் பாராட்ட வைத்திருக்கிறது. அதே போல் பல இடங்களில் வசனம் மாஸ் காட்டுகிறது. ஒரு இயக்குனராக அவர் இப்படத்தின் மூலம் தன்னையே மெருகேற்றி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: ஒரே போட்டோவால் தலைவரை பங்கம் செய்த ப்ளூ சட்டை.. இது என்ன லால் சலாமுக்கு வந்த சோதனை

அதற்கு பலமாக ரஜினியும் இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் அனல் பறக்கிறது. இப்படி படத்தில் பல பிளஸ் இருந்தாலும் சில இடங்கள் கொஞ்சம் போராக தான் நகர்கிறது. அதிலும் இரண்டாம் பாதி கொஞ்சம் அறுவையாக இருக்கிறது என்ற உணர்வை தடுக்க முடியவில்லை. ஆனாலும் லால் சலாம் குடும்பத்தோடு ஒருமுறை பார்க்க வேண்டிய படம் தான்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75 / 5

Trending News