சிவகுமாரால் மாறிய ரஜினியின் வாழ்க்கை.. சூப்பர் ஸ்டார் ஆக போட்ட முதல் விதை!

1977 ஆம் ஆண்டு இயக்குனர் முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புவனா ஒரு கேள்விக்குறி. எழுத்தாளர் மகரிஷி அவர்கள் எழுதிய நாவலைத் தழுவி இயற்றப்பட்ட இத்திரைப்படத்திற்கு பஞ்சு அருணாச்சலம் கதை, வசனம் எழுதி இருப்பார்.

இத்திரைப்படத்தில் நாகராஜன் என்ற கொடூர வில்லனாக நடித்த சிவகுமார், முதன்முதலில் ஹீரோ கதாபாத்திரத்தில் தான் நடிப்பதாக இருந்தது. ஏனென்றால் சிவகுமார் என்றாலே சாந்தமான முகம் குடும்ப கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு என அவர் பெயர் வாங்கியிருந்தார்..

Also Read : நீ என்ன பொம்பள பொறுக்கியா.. ரஜினியை சூட்டிங் ஸ்பாட்டில் திட்டிய சிவக்குமார்

இதனிடையே சிவகுமாரின் வேறு விதமான நடிப்பை கொண்டு வரலாம் என வில்லனாக நடிக்க வைத்தாராம் இயக்குனர் முத்துராமன். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. அதற்கு முன்பு வரை ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.

இவர்கள் இருவருக்கும் சம்பந்தமே இல்லாத கதாபாத்திரத்தில் முதன்முதலில் ஏற்று நடிக்க வைத்த முத்துராமன் இத்திரைப்படத்தை இயக்கி மாபெரும் ஹிட்டாக்கினார். இத்திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் சிவகுமாரின் கதாபாத்திரத்தை தாண்டி பேசப்பட்டது. புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படம் தான் ரஜினியின் சினிமா கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்பட்டது.

Also Read : நான் கஷ்டப்பட்டேன், இவங்க சொகுசா வாழ்றாங்க.. மேடையிலேயே சூர்யா, கார்த்தியை மிரட்டிய சிவக்குமார்

சிறந்த படம், சிறந்த இயக்குனர் என்ற பிலிம்பேர் விருது இத்திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், சிறந்த துணை நடிகருக்கான விருதும் ரஜினிகாந்துக்கு கிடைத்தது. மேலும்
இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

ரஜினிகாந்த் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக பயன்படுத்திய நிலையில் சிவகுமாருக்கு வில்லன் கதாபாத்திரம் செட்டாகவில்லை என்ற விமர்சனமும் அவர் மீது எழுந்தது. இதன் காரணமாக சிவகுமாருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது கூட சொல்லலாம். இதனிடையே ரஜினியின் திரை வாழ்க்கைக்கு சிவகுமாரின் வில்லத்தனமான நடிப்பு அடித்தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : 2 மனைவி இருந்தாலும் ஸ்ரீபிரியா பின்னால் சுற்றிய பிரபல நடிகர்.. கடைசியில் அம்போன்னு விட்டுப் போன பரிதாபம்