வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் தொட்டு கூட பார்க்க முடியாத ரஜினியின் சம்பளம்.. தோல்வி துரத்தினாலும் கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்

ரஜினி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அத்துடன் ரம்யா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கிறார். இவர்களுடைய காம்போ கண்டிப்பாக பார்த்து ரசிக்கிற மாதிரியாக வெற்றியை கொடுக்கும். மேலும் நெல்சன் படமும் அதிக நகைச்சுவையாக இருக்கும் என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

இப்படத்தை ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படம் ரஜினிக்கு மிக முக்கியமான திரைப்படம். இந்த படம் வெற்றிகரமாக ஓடினால் ரஜினியின் பழைய மார்க்கெட் திரும்ப வரும். ஏனென்றால் சமீப காலத்தில் நடித்த இவர் படங்கள் பெரிய சூப்பர் ஹிட் படங்கள் என்று சொல்ற அளவுக்கு அமையவில்லை. அதனால் இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்புகிறார்.

Also read: கமலுடன் நடித்து ரஜினியுடன் நடிக்காத 5 நடிகைகள்.. இன்று வரை வருத்தப்படும் புன்னகை அரசி

மேலும் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ரஜினி உடைய மார்க்கெட் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதற்கு அடுத்து இவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம் ஜெய் பீம் பட கதை எந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியது என்று நாம் அனைவரும் அறிந்ததே. சூர்யாவிற்கும் அதிகளவில் பெருமை சேர்த்த படமாகவும் அமைந்தது. அதே மாதிரி ரஜினிக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையப்போகிறது. இதற்கு அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்ததாக சுதா கொங்கரா கதையில் ரஜினி இணைகிறார். இவரோட கதைதான் சூர்யாவுக்கு நேஷனல் விருதை பெற்றுக் கொடுத்தது.

Also read: இந்த வசனத்தை நான் பேசவே மாட்டேன்.. கடைசி வரை அடம்பிடித்த ரஜினி, அப்படி என்ன வசனம் அது?

இப்படி தொடர்ந்து முக்கிய இயக்குனர் உடனும் மற்றும் லாபத்தை தரக்கூடிய இயக்குனருடன் கூட்டணி சேர்வதால் ரஜினி உடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்து விட்டது. தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் சம்பளம் 80 கோடி. இதற்கு அடுத்து அவர் நடிக்க இருக்கும் ஜெய் பீம் படம் இயக்குனர் படத்தில் அவருடைய சம்பளம் 150 கோடி வாங்க இருக்கிறார். இந்தப் படத்திற்கே 150 கோடி என்றால் லோகேஷ் கனகராஜ் படத்திற்கு இதை விட அதிகமாக சம்பளம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடித்து வந்த படங்கள் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றிருந்தாலும் இவரை விட இதுவரை அதிகமான சம்பளத்தை யாரும் வாங்கினது இல்லை என்று நிரூபித்து வருகிறார். அத்துடன் இவரை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு, ஏன் விஜய் கூட தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு இவருடைய சம்பளம் உயர்ந்து விட்டது. இவரைத் தோல்வி என்ன தான் துரத்தினாலும் எல்லா விதத்திலும் சூப்பர் ஸ்டார் என்றால் நான் மட்டும்தான் என்று கெத்தாக நிரூபித்துக் காட்டி வருகிறார் .

Also read: விஜய்யுடன் நடித்த 5 கிளாமர் குயின்ஸ்.. எஸ் ஏ சி, இளைய தளபதி வச்சி உருட்டிய ஹீரோயின்கள்

Trending News