சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று தலைமுறைகளாக கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். 60 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக மட்டுமே நடித்த வரும் நடிகர். இன்றைய கோலிவுட் பொருளாதாரத்தின் முக்கிய ஆணிவேரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தான். இன்றுவரை முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் இவர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.
ரஜினிகாந்த் படங்கள் என்றாலே அது எவ்வளவு பட்ஜெட்டில் உருவாகிறது என்பதை எல்லாம் தாண்டி எப்பவுமே பிரம்மாண்டத்தின் உச்சம்தான். சூப்பர் ஸ்டார் படங்கள் ரிலீஸ் ஆகும் நாளெல்லாம் தமிழ்நாட்டின் திரையரங்குகள் திருவிழா கோலத்தில் தான் இருக்கும்.
Also Read: ரஜினி கொடுத்த டார்ச்சரால் கடுப்பான இயக்குனர்.. இனி உங்க சவகாசமே வேண்டாம் என்று ஓடிய சம்பவம்
ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்தப் படம் ஹிட்டோ அல்லது பிளாப் போ படத்தின் வசூல் கல்லா கட்டிவிடும். அதனாலேயே தயாரிப்பாளர்கள் இன்று வரைக்கும் ரஜினிகாந்தை நம்பி எவ்வளவு கோடி வேண்டுமானாலும் முதலீடு செய்கின்றனர். அதற்கேற்றவாறு அவருடைய படங்களும் வசூலை வாரிக்குவிக்கின்றன.
1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இன்றைய மும்பை தாதாக்கள் கதைகள் எல்லாம் பாட்ஷாவின் சாயல்தான். ரஜினிகாந்தின் கேரியரில் பாட்ஷா திரைப்படம் ஒரு மிகப்பெரிய மணிமகுடம் என்றே சொல்லலாம். இன்று வரை அந்தப் படம் பேசப்பட்டு வருகிறது.
இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் ஒன்று பல ஹிட் படங்கள் அமைந்தாலும் கிட்டத்தட்ட 850 தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிய திரைப்படம் படையப்பா. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி கணேசன் சேர்ந்து நடித்த படம் இது.
பாட்ஷா திரைப்படம் போலவே இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் படையப்பா. இந்தப் படம் அந்த வருடத்திற்கான அத்தனை விருதுகளையும் பெற்றது. மேலும் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. 2 கோடியில் உருவான இந்த படம் 40 கோடி வரை வசூலித்தது.
Also Read: சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஓகே.. விஜயகாந்தை அசிங்கப்படுத்திய ஹீரோயின்