மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட மதுரை சம்பவம்.. தனுஷுக்கு குடைச்சல் கொடுக்க பெரிய திட்டம் தயார்

சினிமா கேரியரில் உச்சத்தில் இருக்கும் தனுஷ் தற்போது தமிழைத் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லா இடங்களிலும் பிரபலமாகி இருக்கிறார். இதற்கிடையில் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதிலிருந்தே அவருடைய சினிமா கேரியரை அளிப்பதற்கு சூப்பர் ஸ்டாரின் ஆதரவாளர்கள் பல திட்டம் போட்டனர். மேலும் அவருக்கு யாரும் படவாய்ப்பு தரக்கூடாது என்று சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் சில தயாரிப்பாளர்களிடம் கூறி தனுசை அடியோடு அழிப்பதற்கு முயற்சி செய்தனர்.

ஆனால் அவை எதுவும் வேலைக்கு ஆகவில்லை. அவர்கள் போட்ட திட்டம் அனைத்தும் தனுசை ஒன்றும் செய்யமுடியாமல் போனது. மேலும் அவர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி கொடிகட்டி பறந்து வருகிறார். அதனால் அவர்கள் தனுஷுக்கு குடைச்சல் கொடுக்க தற்போது ஒரு பழைய பிரச்சனையை தோண்டி இருக்கிறார்கள்.

அதாவது தனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் கிடையாது அவர் எங்களுடைய மகன் என்று மதுரையை சேர்ந்த ஒரு தம்பதிகள் சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இது அப்போது திரையுலகையே அதிரச் செய்தது. இது தொடர்பாக தனுஷும் நீதிமன்றத்துக்கு வந்து தன் தரப்பு நியாயத்தை தெரிவித்தார்.

தற்போது இந்த வழக்கை தான் மதுரையை சேர்ந்த ரஜினியின் ஆதரவாளர்கள் மீண்டும் தோண்டி எடுத்து தனுசை மன ரீதியாக தாக்க முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கஸ்தூரிராஜா, தனுஷ் சம்பந்தமாக கொடுத்த பல தகவல்கள் நம்பிக்கையானதாக இல்லை.

அதனால் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தால் நிச்சயம் தனுஷ் மன உளைச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் சூப்பர் ஸ்டாரின் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை வைத்து அவருக்கு குடைச்சல் கொடுக்கும் எண்ணத்தில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.