சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

48 வருடம் அசைக்க முடியாத நாற்காலி.. 73 வயதில் ரஜினி சேர்த்து வைத்த சொத்து மதிப்பு

Rajini’s networth: சூப்பர் ஸ்டார் இன்று 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆனால் வயசு தான் ஏறுதே தவிர தலைவர் இன்னும் இளைஞர் போல் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். அதனாலேயே அவர் தற்போது கை நிறைய படங்களை கமிட் செய்து பிஸியாக நடித்து வருகிறார்.

ஒரு வில்லனாக அறிமுகமான இவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இன்று தொட முடியாத உச்சத்தை அடைந்திருக்கிறார். அதேபோன்று அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் தன் செல்வாக்கை உயர்த்தி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் 48 வருடங்களாக சூப்பர் ஸ்டார் ஆக அவர் காட்டும் கெத்து தான்.

அந்த நாற்காலியை தட்டிப் பறிக்க இப்பவும் கூட பல முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனாலும் அதை அசைக்கக்கூட முடியவில்லை என்பதுதான் உண்மை. கழுத்தில் ருத்ராட்சம், கையில் வாட்ச், வெள்ளை உடை என இதுதான் அவருடைய அடையாளம். அப்படிப்பட்ட இந்த எந்திரனின் சொத்து மதிப்புகளை பற்றி இங்கு காண்போம்.

Also read: ரஜினி படம் என நம்பி ஏமாந்த 5 இயக்குனர்கள்.. அவங்க சம்பளத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திய படங்கள்

அந்த வரிசையில் போயஸ் கார்டனில் ரஜினி இருக்கும் ஆடம்பர பங்களாவின் மதிப்பு மட்டுமே 40 கோடியை தாண்டுகிறது. அதேபோன்று சென்னை மட்டுமல்லாமல் பெங்களூரு உட்பட இன்னும் பல இடங்களிலும் இவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன.

மேலும் இவரிடம் நான்கு வெளிநாட்டு காஸ்ட்லி கார்கள் இருக்கின்றன. அதன் மதிப்பு மட்டுமே 40 கோடியை தாண்டும். அந்த வகையில் இவரிடம் இருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 500 கோடியாக இருக்கிறது. இது இல்லாமல் அசையும் சொத்துக்களின் மதிப்பையும் சேர்த்தால் 600 கோடியை நெருங்கும் என்கிறது கருத்துக்கணிப்புகள்.

இப்படி மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்துக்காக 80 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருந்தார். ஆனால் படம் தாறுமாறு ஹிட் அடித்ததில் மகிழ்ந்து போன சன் பிக்சர்ஸ் அவருக்கு லாபத்தில் ஒரு பங்கையும், விலை உயர்ந்த காரையும் பரிசளித்தது.

Also read: தலைவர் பிறந்தநாளில் தனுஷ் போட்ட ட்வீட்.. மாமனாரை விடாமல் தாஜா பண்ணும் மருமகன்

அதை தொடர்ந்து தற்போது அவர் நடித்துவரும் தலைவர் 170 படத்துக்காக 140 கோடியும் தலைவர் 171க்கு 200 கோடி சம்பளமும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இதைவிட பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்றது தான் அவர் சேர்த்த நிஜமான சொத்து. இப்படி சிங்கமாக கெத்து காட்டும் தலைவருக்கு எங்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Trending News