வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினிய சீண்டி பார்ப்பது முட்டாள்தனம், தெளிவான விளக்கம் கொடுத்த ஞானவேல்.. சரியான தலைவனா இத செய்யுங்க

Super Star Rajini: ‘பாய் காட் தலைவர் 170’ என்ற ஹேஸ் டேக் சோசியல் மீடியாவில் நேற்றிலிருந்து ட்ரெண்ட் ஆகிறது. ஏற்கனவே நடந்த பிரச்சனைக்கு தேவையில்லாமல் ரஜினியை இப்போது சம்பந்தப்படுத்தி சீண்டிப் பார்க்கின்றனர். ஜெய் பீம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த போலீஸ் வீட்டு கேலண்டரில் ஒரு குறிப்பிட்ட சாதி கட்சியினரின் சங்க கலசம் இருந்தது.

இந்த படம் ரிலீஸ் ஆன போதே அந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் உடனே படக்குழு ஒரே வாரத்தில் அதனை நீக்கிவிட்டது. இந்த படத்தை 1000 பேருக்கு போட்டு காமிச்சாங்க, அந்த பிரிவியூ சோவில் யாராவது ஒருத்தர் இதைப்பற்றி சொல்லியிருந்தால் அப்பவே நீக்கி இருப்பாங்க.

Also Read: முன்னணி ஹீரோக்கள் கைவிட்டதால் குரங்கை நம்பிய இயக்குனர்.. ரஜினி படத்தால் கிடைத்த அவப்பெயர்

அந்த காலண்டரை ஒரு பொருளாகவே பார்த்தமே தவிர அதில் இருக்கும் விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை. இனிமேல் இந்த தப்பு நடக்காது என்று ஜெய்பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் தெளிவான விளக்கம் கொடுத்தார். அப்படி இருந்தும் அந்த சாதி கட்சியினர் அடங்காமல் டிஜே ஞானவேல் அடுத்ததாக இயக்கும் தலைவர் 170 படத்தை பாய் காட் செய்யணும் என்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

சினிமாவில் எவ்வளவு பெரிய மனுஷனாக இருக்கக்கூடிய ரஜினியை இப்படி எல்லாம் அசிங்கப்படுத்துவது பெரிய முட்டாள்தனம். இதற்கெல்லாம் ஒரே முடிவு அந்த சாதி கட்சியின் தலைவர் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும். அவர்களது சாதி கட்சி சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் படத்தில் பேசக்கூடாது என்பதை தெரிவித்து பிரச்சனையை முடித்து விட வேண்டும்.

Also Read: சித்தாவால் சித்தார்த் பட்ட அவமானம்.. ரஜினி ஃபோன் போட்டு என்ன சொன்னார் தெரியுமா.?

ஏனென்றால் இயக்குனர் டிஜே ஞானவேல் ஜெய் பீம் படத்தில் நடந்த தப்பு இனிமேல் நடக்காது என்று பகிரங்கமாகவே தெரிவித்தார். இதுக்கு மேல என்ன வேணும். அப்படியும் தலைவர் 170 படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நியாயம்.

இதனை அந்த கட்சியின் தலைவர் தான் முடித்து வைக்க வேண்டும். அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு கட்சியின் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் அவர் ஒரு நல்ல அரசியல்வாதி என்று மக்கள் சொல்லுவார்கள்.

Also Read: பாபா படத்தை விட 10 மடங்கு பிரச்சனையை சந்திப்பார் ரஜினி.. தலைவர் 170 க்கு ஜாதி ரீதியாக பகிரங்கமாக வரும் மிரட்டல்

Trending News