புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Pandian Stores: தங்கமயிலை கடத்த பிளான் பண்ணிய ராஜியின் அண்ணன்.. தலையில் மண்ணை அள்ளிப்போட்ட பாண்டியன்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் ஆசைப்பட்ட மாதிரி மூத்த மகன் சரவணனுக்கு கல்யாண ஏற்பாடுகளை பண்ணி விட்டார். அதன்படி மண்டபத்திற்கு அனைவரும் வந்த நிலையில் தங்கமயில் வீட்டிற்கு போய் மீனா, ராஜி பொன்னை அழைத்து வந்து விட்டார்கள். பிறகு கச்சேரி கலக்கட்டுது என்று சொல்வதற்கு ஏற்ப ஒரே ஆட்டம் பாட்டம் தான்.

ஆனால் இதில் தங்கமயில் மட்டும் என்னதான் ஆனந்தத்தில் இருந்தாலும் மனதிற்குள் ஒரு பெரிய பயத்திலேயே இருக்கிறார். காரணம் பொய் பித்தலாட்டம் பண்ணி ஏமாற்றுகிறோம் என்ற ஒரு பயம் அவருக்கு இருக்கிறது. இதனை தொடர்ந்து பங்க்ஷனில் பாண்டியனின் மகள் குழலிக்கி ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் தங்கமயில் போட்டிருக்கும் நகைகளை ஆசாரியை கூப்பிட்டு ஒரிஜினல் தானா என்று பார்க்க சொல்கிறார்.

சொந்த செலவில் சூனியம் வைத்த பாண்டியன்

இதைக் கேள்விப்பட்ட தங்கமயில் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுகிறார். ஆனால் இதெல்லாம் ஒரு நாடகமாக தான் இருக்கும். இப்படி எல்லாம் நடக்கும் என்று தங்கமயில் அம்மா முன்கூட்டியே கணித்ததால் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மயக்கம் போட்டு விழுந்துவிடு என்று தங்கமயிலுக்கு டிரைனிங் கொடுத்து வைத்திருப்பார்.

அதன்படி தங்கமயில் அதிர்ச்சியில் விழுந்தவுடன் அனைவரும் பதட்டப் பட்டதால் நகை விஷயத்தை அப்படியே மறந்து விட்டார்கள். பிறகு ரிஷப்ஷன் எதிர்பார்த்தபடி நன்றாகவே முடிய போகிறது. இதற்கிடையில் பாண்டியன் ஆசைப்பட்டபடி மூத்த மகனுக்கு கல்யாணம் நடந்து விட்டால் நம்மளை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று ராஜியின் அண்ணன் குமரவேலு புலம்புகிறார்.

உடனே நண்பர்கள் அப்படி என்றால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று சொல்கிறார்கள். அதுதான் எப்படி என்று கேட்கும் பொழுது கல்யாண பொண்ணை கடத்தி விடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். இதை கேட்ட குமரவேலு ஓகே தான் ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் என் பெயர் வெளிவந்திடக் கூடாது என்று சொல்கிறார்.

பிறகு மண்டபத்திற்கு தங்கமயிலை கடத்த வரும் நேரத்தில் பாண்டியனுக்கு தெரியவரும். அதன்பின் பாண்டியன் தான் இந்த பிரச்சினையில் இருந்து தங்கமயிலை காப்பாற்ற போகிறார். ஒருவேளை குமரவேலு ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பாதிலே நின்று இருந்தால் பாண்டியன் குடும்பம் தப்பிச்சிருக்கும். ஆனால் அது தெரியாமல் பாண்டியன் தானே தலையில் மண்ணை வாரி போடும் வகையில் அனைத்தையும் சொதப்பிவிட்டார்.

Trending News