புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பாண்டியனை அசிங்கப்படுத்த சகுனி வேலையை பார்த்த ராஜியின் அப்பா.. வக்ரபுத்தியில் தம்பியை மிஞ்சிய முத்துவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் மகன்களுக்கு கல்யாணம் முடிந்த நிலையில் தன் வீட்டோடு இருக்கும் மச்சானுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அந்த வகையில் பழனிவேலுக்கு ஏற்ற மாதிரி ஒரு பொண்ணு பார்த்து, அந்தப் பெண் வீட்டிற்கு குடும்பத்தில் இருப்பவர்களை கூட்டிட்டு போய் நல்லபடியாக சம்பந்தம் பேசி முடித்து விட்டார்.

இதனை தொடர்ந்து பழனிவேலுவின் நிச்சயதார்த்தத்தை நல்லபடியாக நடத்தப் போகிறேன். அதனை அடுத்து கல்யாணத்தையும் ஊர்மக்கள் பிரமிக்கும் அளவிற்கு சிறப்பாக முடிப்பேன் என்று வாய் சவடால் விட்டார். இதனை பார்த்து கடுப்பான கோமதியின் அண்ணன்கள் ஆன சக்திவேல் மற்றும் முத்துவேல் தன்னுடைய தம்பிக்கு இவர் யாரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பதற்கு.

அண்ணன்கள் ஆக நாம் இருக்கும் பொழுது எதற்கு பாண்டியன் பழனிவேலுவின் விஷயத்தில் மூக்கை நுழைகிறார் என்ற கோபம் இருந்தது. ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பாண்டியன் ஏற்பாடு பண்ண நிச்சயதார்த்தத்துக்கு குடும்பத்துடன் அனைவரும் கிளம்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் பழனிவேலுக்கு அம்மா இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தது.

இந்த ஆசையை தெரிந்து கொண்ட பாண்டியன், பழனிவேலுவிடம் நீ போயிட்டு உங்க அம்மாவ நிச்சயதார்த்தத்திற்கு கூட்டிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே பழனிவேலு, அம்மா மற்றும் அண்ணிகளையும் நிச்சயதார்த்தத்துக்கு வாங்க என்று அழைத்து விட்டு வந்து விடுகிறார். பிறகு பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மண்டபத்திற்கு போயிட்டு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுகிறார்கள்.

அதே மாதிரி பழனிவேலுவின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக கோமதியின் அம்மா மற்றும் இரண்டு அண்ணிகளும் கிளம்பி விட்டார்கள். அந்த நேரத்தில் சக்திவேல் மற்றும் முத்துவேல் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். இவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு போவதை தெரிந்து கொண்ட சத்திவேல் போக கூடாது என்று சண்டை போடுகிறார். ஆனால் முத்துவேல் எதுவும் சொல்லாமல் நீங்கள் போயிட்டு வாங்க என்று அனுப்பி வைத்து விடுகிறார்.

அப்பொழுது சக்திவேல், முத்துவேல் விடம் நீங்க ஏன் அப்படி சொன்னீங்க. நம்மளை எதிர்த்து ஒரு காரியத்தை அவங்க பண்ணுறாங்க. அதற்கு நம் வீட்டார் போக வேண்டுமா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு முத்துவேல் அங்கு நிச்சயதார்த்தம் நடந்தால் தானே. அப்படி எதுவும் அங்கே நடக்கப் போவதில்லை. நிச்சயதார்த்தம் நின்னு போயி மொத்த குடும்பமும் அவமானப்பட்டு திரும்பி வரப் போகிறார்கள். அதை கண்குளிர பாத்துட்டு வரட்டும் என்பதற்காகத்தான் அனுப்பி வைத்தேன் என முத்துவேலு சொல்லுகிறார்.

அந்த வகையில் பழனிவேலுவின் நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாணத்தில் சக்திவேல் தான் ஏதாவது குளறுபடி பண்ணி பிரச்சினை பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சக்திவேலுவை விட முத்துவேலு பயங்கரமான ஆளாய் இருப்பார் போல. அதனால் தான் இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி பாண்டியனை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தம்பியின் சந்தோஷத்தை கூட மறந்து விட்டு சகுனி வேலையை பார்த்திருக்கிறார்.

அதாவது பெண் வீட்டார்களிடம் சென்று பாண்டியன் மற்றும் பழனிவேலுவை பற்றி தவறாக சொல்லி உங்களுடைய பொண்ணை பாண்டியன் குடும்பத்திற்கு நம்பி கொடுக்காதீங்க என்று அவருடைய வக்கரபுத்தியை காட்டிட்டு வந்து விட்டார். அதனால் பாண்டியனின் கவுரமும் போய்விட்டது, பழனிவேலுவின் சந்தோஷமும் பறிபோய் விட்டது.

Trending News