வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ராஜ்கிரணை மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய சூப்பர் ஸ்டார்.. பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!

தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ராஜ்கிரண் எப்போதும் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அந்த கதையை நன்றாக கேட்டுவிட்டு பின்னர் தான் முடிவு செய்வார். அதுவும் அந்தக் கதை பிடித்தால் மட்டுமே அவர் நடிக்க ஒத்துக் கொள்வார்.

கதை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக முடியாது என்று மறுத்து விடுவார். மற்ற நடிகர்களைப் போல் அதிக சம்பளம் கிடைத்தால் ஓகே சொல்லும் ஆள் கிடையாது. இதனாலேயே அவரிடம் கதை சொல்வதற்கு பலருக்கும் தயக்கம். ஏனென்றால் இவரிடம் கதை கூறுவது பிரபல நடிகரிடம் கதை கூறுவதற்கு சமம்.

இதனால்தான் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அப்படி இவருக்கு நல்ல பாராட்டைப் பெற்று கொடுத்த திரைப்படம் சண்டக்கோழி. இந்த திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் ஹீரோ விஷாலை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இதற்காக இயக்குனர் மிகவும் கஷ்டப்பட்டு இவருடைய கதாபாத்திரத்தை செதுக்கி இருந்தார். அதேபோன்றுதான் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம். இந்த கதையை இவருக்காகவே தனுஷ் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இவரை ஒரு பிரபல நடிகர் அசிங்கபடுத்தி இருக்கிறார். அதாவது ராஜ்கிரண் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அப்போது ராம்சரனின் அப்பா சிரஞ்சீவி, படத்தின் இயக்குனரிடம் ராஜ்கிரண் கேரக்டரைப் பற்றி கேட்டிருக்கிறார்.

அதற்கு இயக்குனர் ராம் சரணை விட மிகவும் வலுவான கதாபாத்திரம் என்று சொல்லியிருக்கிறார். உடனே சிரஞ்சீவி படத்தில் ராஜ்கிரணை வில்லனாக மாற்றி விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.  இதற்கு ராஜ்கிரண் ஒத்துக்கொள்ள மாட்டார் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.

உடனே சிரஞ்சீவி அப்படி என்றால் அவரை படத்தில் இருந்து தூக்கி விட்டு பிரகாஷ்ராஜை போடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். படம் பாதிக்குமேல் முடிவடைந்த நிலையில் ராஜ்கிரணை அந்த படத்திலிருந்து நீக்கி இருக்கின்றனர். பாதி படத்தில் நடித்து விட்டு அவரும் ஏமாற்றத்துடன் விலகி இருக்கிறார். தற்போது அந்த கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார். கூடிய விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Trending News