சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குஸ்தி மட்டுமில்ல ராஜ்கிரண் காமெடியில் கலக்கிய 5 படங்கள்.. ஸ்விம்மிங் ஃபுல்லில் துவைத்த மஞ்சப்பை தாத்தா

பொதுவாகவே ராஜ்கிரண் தனது படங்களில் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது குணச்சித்திரம் மற்றும் கௌரவ கதாபாத்திரங்களில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ராஜ்கிரண் என்றால் அடிதடி ஹீரோ தான் என்ற நிலையை மாற்றி தனக்கும் காமெடி வரும் என்பதை ஒரு சில படங்களின் மூலம் நிரூபித்துள்ளார். அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு காணலாம்.

ரஜினி முருகன்: பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான திரைப்படம் ரஜினி முருகன். இந்தப் படத்தில் ஹீரோவின் தாத்தா கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். அதிலும் இப்படத்தில் தனிமையில் வாடும் இவர் தனது மகன்களை பார்ப்பதற்காக சிவகார்த்திகேயனுடன் இணைந்து, பல்வேறு சம்பவங்களை காமெடியாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: சூட்டிங் ஸ்பாட்டில் ராஜ்கிரணை அப்பா போல் தாங்கும் நடிகர்.. நீங்களே அதை சொன்னாலும் நம்புற மாதிரி இல்ல!

பவர் பாண்டி: நடிகர் தனுஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பவர் பாண்டி. இப்படத்தில் பிரசன்னாவின் தந்தை கதாபாத்திரத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடித்திருப்பார். அதிலும் இப்படத்தில் இவர் பேசும் அனைத்து வசனங்களும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் தனது பேரனுடன் ராஜ்கிரண் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைத்தது. 

பாசமுள்ள பாண்டியரே: டிபி கஜேந்திரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாசமுள்ள பாண்டியரே. இதில் ராஜ்கிரண் உடன் மீனா, ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் பாண்டியர் என்னும் கேரக்டரில் ராஜ்கிரண் நடித்திருப்பார். அதிலும் படம் முழுவதிலும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் வடிவேல் உடன் இவர் அடித்த லூட்டி அல்டிமேட் ஆக இருக்கும்.

Also Read: காலில் விழுந்து சரண்டரான தம்பதிகள்.. இறங்கி வர யோசிக்கும் ராஜ்கிரண்

எல்லாமே என் ராசாதான்: 1995 ஆம் ஆண்டு ராஜ்கிரண் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் எல்லாமே என் ராசாதான். இதில் சங்கீதா, ரூபாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் இப்படத்தில் வடிவேல் உடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நகைச்சுவையில் பிச்சு உதறி இருப்பார்.

மஞ்சப்பை: ராகவன் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான திரைப்படம் மஞ்சப்பை. இதில் விமல் உடன் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் வெள்ளந்தியாக இருக்கக்கூடிய தாத்தா வெங்கடச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ராஜ்கிரனின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

Also Read: ராஜ்கிரண் கல்லாகட்டிய 5 திரைப்படங்கள்.. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அசத்திய 2 படங்கள்

Trending News