Raj Kiran: நடிகர் மற்றும் இயக்குனர் ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் 25க்கும் மேற்பட்ட படங்களின் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும் இருந்த ராஜ்கிரண் தன்னை ஒரு ஹீரோவாகவும் முன்னிறுத்திக் கொண்டு வெற்றி பெற்றார். ராஜ்கிரண் தயாரிப்பில் வெளியாகி கல்லா கட்டிய ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
தயாரிப்பாளராக கல்லா கட்டிய 5 படங்கள்
ராசாவே உன்னை நம்பி: ராமராஜன் மற்றும் ரேகா இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் தான் ராசாவே உன்னை நம்பி. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசை மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. ராஜ்கிரண் தயாரித்து முதலில் வெளியான இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் தான் அவர் தொடர்ந்து படங்களை இயக்குவதற்கு துணிந்து களமிறங்கினார்.
என்ன பெத்த ராசா: ராமராஜன் உடன் இணைந்து முதல் வெற்றியை பார்த்ததால் ராஜ்கிரண் அடுத்தும் அவரைத்தான் ஹீரோவாக வைத்து படம் தயாரித்தார். என்ன பெத்த ராசா படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் அந்த படத்திற்கு கதையும் ராஜ்கிரண் தான் எழுதியிருக்கிறார். வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் இசை இந்த படத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படத்தில் வரும் அம்மான்னா சும்மா இல்லடா என்னும் அம்மா சென்டிமென்ட் பாடல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
Also Read:ராஜ்கிரனிடம் மன்னிப்பு கேட்டு கதறிய மகள்.. அதிர்ச்சி கிளப்பிய வீடியோ
என் ராசாவின் மனசிலே: இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம் தான் என் ராசாவின் மனசிலே. குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மீனா இந்த படத்தில் தான் ஹீரோயின் ஆக அறிமுகமானார். தன்னை ஒரு ஹீரோவாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தயக்கத்துடன் நடித்த ராஜ்கிரணுக்கு இந்த படம் வெள்ளி விழா படமாக மாறியது.
அரண்மனைக்கிளி: ராஜ்கிரண் இயக்கி, தயாரித்து, கதை எழுதி, ஹீரோவாக நடித்த படம் தான் அரண்மனைக்கிளி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை கடந்து கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் வரும் ராத்திரியில் பாடும் பாட்டு, அடி பூங்குயிலே, ராசாவே உன்னை விடமாட்டேன் போன்ற பாடல்கள் இன்றுவரை கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கும் அளவுக்கு இளையராஜாவின் இசை இருக்கிறது.
எல்லாமே என் ராசாதான்: நடிகர் ராஜ்கிரண் கதை மற்றும் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து ஹீரோவாக நடித்த படம் தான் எல்லாமே என் ராசாதான். இந்த படத்தில் நடிகை சங்கீதா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை தொடர்ந்து தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.
Also Read:ஒரே மாதத்தில் ரிலீசான 4 படங்கள்.. ராஜ்கிரண் உடன் மல்லுக்கட்ட முடியாமல் தோற்றுப் போன ரஜினி