செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக் பாஸுக்கு பின் ராஜூ எடுத்த அதிரடி முடிவு.. காசு வந்தா கழட்டி விட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன ராஜு,  தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். அதில்  சமீபத்தில் ராஜு எடுத்திருக்கும் அதிரடி முடிவைப் பற்றி ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதில் ராஜு இனிமேல் சீரியல்களில் நடிக்கப் போவதில்லையாம். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறதாம். ஆகையால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி வெள்ளித்திரையில் நடிக்கப் போவதாக முடிவெடுத்திருக்கிறார்.

ஏற்கனவே ராஜு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு ராஜீவுக்கு வாய்ப்பு கிடைத்ததும் அந்த சீரியலில் கத்தி வெளிநாட்டிற்கு செல்வதுபோல் காண்பித்து விட்டனர்.

மேலும் கத்தி தற்போது சவுதி அரேபியாவில் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டு சிறைதண்டனை அனுபவித்து வருவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்ததும் ராஜு, அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் ராஜு சீரியல்களில் நடிக்கப் போவதில்லை என்று எடுத்திருக்கும் முடிவால் கத்தி கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர் நடிக்கவுள்ளார். கூடிய விரைவில் கத்தி கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகின்றார் என்பது தெரியவரும்.

அத்துடன் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல வருடங்களாக முயற்சி செய்யும் இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யர்களான ராஜு, பிக்பாஸ் நிகழ்ச்சியால் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்று சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு கால் பதிப்பதால் சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Trending News