சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

எக்ஸ் கணவரை மறைமுகமாக அவமானப்படுத்திய ரக்ஷிதா.. காரணம் கேட்டு ஷாக்கான பிக் பாஸ் டீம்

Rachitha Mahalakshmi: ரக்ஷிதா என்பதைவிட சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த நடிகை என்று சொன்னால் அனைவருக்கும் ரொம்பவே பரிச்சயம் ஆகிவிடும். அந்த அளவிற்கு சீரியலில் மூலம் பேரும் புகழையும் சம்பாதித்தவர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற நாடகத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியஸ்களை பண்ணினார்.

இதனை அடுத்து பல தொடர்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார். பின்பு கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் இடத்திற்கு வந்தார். அப்படிப்பட்டவர் தற்போது எக்ஸ்ட்ரீம் என்னும் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது.

அப்பொழுது பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்த ரக்ஷிதா, நான் வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இங்கே வந்த பிறகு தமிழ் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் அதை கற்றுக்கொண்டு தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தேன். இங்கு தான் என்னுடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் நான் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

Also read: பிக் பாஸ்க்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டான ரக்ஷிதா.. விஜயசாந்திக்கு டஃப் கொடுக்கும் கெட்டப்

அதன்பின் முதன் முதலாக வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது. அதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வாய்ப்பு நம்மை தேடி வரும் என்று சொல்வது உண்மை இல்லை. நாம் தான் நமக்கான ஒரு மேடையை அமைத்துக் கொள்ள வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி நம்மை கை தூக்கி விடும் ஒரு மேடை அவ்வளவுதான்.

அதில் நம்முடைய கேரக்டர் மற்றும் திறமை மற்றவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் நமக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மையாக இருந்தாலும் இவருடைய எக்ஸ் கணவரான தினேஷை மறைமுகமாக அவமானப் படுத்தியதாக தெரிகிறது. அதாவது தினேஷ் தற்போது முடிந்த சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் அவர் கலந்து கொண்ட பொழுது முழுக்க முழுக்க பிக் பாஸ் மேடையை நான் என்னுடைய திறமையை காட்டி மற்ற இடங்களுக்கு போய் ஜெயிக்க வேண்டும் என்ற முயற்சியில் தான் வந்தேன் என்று அடிக்கடி கூறினார். அதனால் இவருக்காக கொடுக்கப்பட்ட ஒரு சவுக்கடியாக தான் ரக்ஷிதா பத்திரிகையாளர்களிடம் நேற்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Also read: பிக்பாஸில் கணவரை பற்றி வாய் திறக்காத ரக்ஷிதா.. பிரிவுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா!

Trending News