செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ராபர்ட் மாஸ்டரை நம்ப வச்சு கழுத்தறுத்த ரட்சிதா.. டம்மி பீஸா ஆக்கிட்டீங்களே என கதறல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் ராபர்ட் மற்றும் ரட்சிதா இருவரும் ராஜா ராணியாக வருகின்றனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்கு எதற்கு வந்தோம் என்றே தெரியாமல் ரட்சிதா பின்னாடியே சுற்றி வரும் ராபர்ட் மாஸ்டருக்கு இந்த டாஸ்க் ரொம்பவே அட்வான்டேஜ் ஆக இருந்தது.

நிஜமாகவே ரட்சிதா தன்னுடைய ராணி என்பது போன்று அவர் கொடுத்த அலப்பறைகள் பார்ப்பவர்களுக்கு கடுப்பை தான் வரவழைத்தது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரட்சிதா தன்னை ஏமாற்றி விட்டார் என்று ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கி கதறி அழுகிறார். இதையும் ரசிகர்கள் ரொம்ப ஓவரா இருக்கு என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Also read: மாஸ்டருக்கு எதிராக சாட்டையை சுழற்ற போகும் கமல்.. வஞ்சத்தால் பழி வாங்கப்பட்ட போட்டியாளர்

டாஸ்க் படி அசீம் மற்றும் ரட்சிதா இருவரும் சேர்ந்து தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மேப்பை வைத்து மியூசியத்தில் இருக்கும் பொருளை திருட வேண்டும். இதை அவர்கள் திட்டமிட்டபடி ரகசியமாக செய்து முடித்தார்கள். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இப்படி ஒரு டாஸ்கை கொடுத்த பிக் பாஸ் அதை அனைவர் முன்பும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.

தன் கூடவே இருந்து கொண்டு ராணி இப்படி ஒரு வேலையை பார்த்ததை தாங்க முடியாத ராபர்ட் மாஸ்டர் சோகத்துடன் வீட்டை சுற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் ரட்சிதா தன்னை இப்படி ஏமாற்றி விட்டார் என்று கூறி கதறி அழுகிறார். ஒரு விளையாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இப்படி ஏதோ நிஜத்தில் ஏமாற்றிவிட்டது போல அவர் சீன் போடுவது சற்று எரிச்சலாக தான் இருக்கிறது.

Also read: ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து பிக்பாஸில் மலர்ந்த அடுத்த காதல்.. நிராகரித்த கதிரவன்

ராபர்ட் இப்படி கதறி அழுவதை கேட்ட ரட்சிதாவும் ஏதோ பெரிய பிழை செய்துவிட்டது போன்ற குற்ற உணர்ச்சியில் இருப்பது போன்று ப்ரோமோ முடிந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதற்காக இந்த சென்ட்டிமென்ட் சீன் என்றும் ரட்சிதா அப்போதுதான் வந்து சமாதானப்படுத்துவார் என ராபர்ட் எதிர்பார்க்கிறார் என்றும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

எது எப்படியோ இன்றோடு இந்த டாஸ்க் முடியப் போகிறது என்று ரசிகர்கள் பெரும் நிம்மதியாக இருக்கின்றனர். ஏனென்றால் தூய தமிழில் பேசுகிறேன் என்று போட்டியாளர்கள் எல்லோரும் இந்த வாரம் முழுவதும் தமிழை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் ஒரு வழி செய்து விட்டார்கள். அந்த வகையில் போட்டியாளர்கள் வார இறுதி நாளையும், ராபர்ட் மாஸ்டரின் எலிமினேஷனையும் காண காத்திருக்கின்றனர்.

Also read: பிக்பாஸ் பத்த வச்ச நெருப்பு இப்ப No.1 ட்ரெண்டிங்.. சின்னா பின்னமாகிப் போன அசீமின் ராஜதந்திரம்

Trending News