வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரொமான்ஸ் பண்ண அவர்தான் வேண்டும்.. சுறா மீனுக்கே ரகுல் பிரீத்தி சிங் விரிக்கும் வலை

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் க்யூட்டான நடிகை என பெயர் வாங்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது கமலஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், மற்ற நடிகர்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு தமிழ் நடிகர் ஒருவரை மட்டும் குறிப்பிட்டு, அவருடன் தான் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாக வாய்ப்பு கேட்டுள்ளார்.

Also Read: நீச்சல் உடையில் அலறவிட்ட ரகுல் பிரீத் சிங்

கோலிவுட்டின் வசூல் நாயகனாக மட்டுமல்லாமல், எக்கச்சக்கமான ரசிகர்களை வளைத்துப் போட்டிருக்கும் தளபதி விஜய், ரசிகர்களை மட்டுமல்ல நடிகைகளுக்கும் பிடித்தமான நடிகராக மாறிவிட்டார். இவருடைய 66-வது படமான வாரிசு படத்தில் இவரின் வெறித்தனமான ரசிகை நடிகை ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக ஜோடி சேர்ந்திருக்கிறார்.

அதன் பிறகு தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் தற்போது இளைஞர்களின் மனதை கவர்ந்திழுக்கும் கீர்த்தி ஷெட்டியும் விஜய்யின் தீவிர ரசிகை. ஆகையால் அவருடன் சேர்ந்து படம் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று விருப்பம் தெரிவித்தார்.

Also Read: போதைப்பொருளும்.. ரகுல் ப்ரீத் சிங் கதையும்

இவர்களது வரிசையில் நடிகை ரகுல் பிரீத் சிங்கும், விஜய்யுடன் இணைந்து நடிக்க ஏங்குகிறார். பொதுவாக ரகுல் பிரீத் சிங் தமிழ் நடிகர்களுடன் நடிக்க ஆர்வமாக உள்ளார். இதனால் எந்த நடிகருடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என கேட்டதற்கு, தளபதி விஜய் கூட நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன்.

ஏனென்றால் அவர் நடனம், நடிப்பு என எல்லாம் இருக்கக்கூடிய நடிகர் விஜய் தான். அதனால் அவர் கூட நடிக்க வேண்டும். யாராவது எனக்கிருக்கும் இந்த ஆசையை விஜய்யிடம் வெளிப்படுத்தி, எனக்கு சான்ஸ் வாங்கித் தாருங்கள் என்றும் ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படையாக வாய் திறந்து வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

Also Read: மேக்கப் போடாமல் இருக்கும் தமிழ் நடிகைகள் லிஸ்ட்

அந்த அளவிற்கு விஜயின் ரசிகராக ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். மேலும் ‘விஜய் சார் கூட நடிக்க சான்ஸ் தாங்கன்னு சொல்றதுக்கு எந்த தயக்கமும் இல்லை’ எனவும் ராகுல் ப்ரீத் சிங் கூறியிருக்கிறார்.

Trending News